இந்தியாவின் டாப், சிறந்த மதிப்புமிக்க கார்கள் - முழு விவரங்கள்

By Ravichandran

கார் வாங்குவது அனைவரது வாழ்விலும் முக்கியமான லட்சியமாக உள்ளது. நீங்களும் கார் வாங்க விரும்புகிறீர்களா?

கார்களை வாங்கும் போது, கொடுக்கும் காசுக்கு உண்மையான மதிப்பு வழங்கும் கார்கள் குறித்த கார்களை பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

இது குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

கார்களின் வகைபடுத்தல்;

கார்களின் வகைபடுத்தல்;

நாம் வாங்கும் கார்கள் பல்வேறு விதங்களில் வகைபடுத்தபட்டுள்ளது.

உதாரணமாக, சிறிய கார்கள், சிறிய ஹேட்ச்பேக், ஹேட்ச்பேக், பிரிமியம் ஹேட்ச்பேக், செடான், எம்பிவி மற்றும் எஸ்யூவி என ஏராளமான வகைகளில் வெளியாகிறது.

சிறிய கார்கள்;

சிறிய கார்கள்;

சிறிய கார்களின் வகைகளில், சில சிறந்த கார்கள் விற்கபடுகிறது. இதில், டாடா நானோ, டாடா நானோ ஜென்எக்ஸ், மாருதி ஆல்டோ, ஹூண்டாய் இயான் மற்றும் ரெனோ க்விட் ஆகியவை இந்த சிறிய வகை கார்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த கார்களின் விலைகள், 2 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய்க்கு இடையில் விற்கபடுகிறது.

டாடா நானோ;

டாடா நானோ;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் நானோ தான் உலகிலேயே மிகவும் விலை மலிவான கார் என்ற பெருமையுடன் அறிமுகமாகியது.

இது அறிமுகம் செய்யபட்ட காலம் முதல் மக்களிடம் அமோக வரேவேற்பை பெற்று வருகிறது.

மாருதி ஆல்டோ;

மாருதி ஆல்டோ;

மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்து வழங்கும் மாருதி சுஸுகி ஆல்ட்டோ தான் இந்தியாவில் அதிக விற்பனையாகும் மாடலாக விளங்குகிறது. இந்த மாடலில் 3 மில்லியன் கார்கள் விற்பனை செய்யபட்டு சாதனையை படைக்கபட்டுள்ளது.

மாருதி சுஸுகி ஆல்ட்டோ ஹேட்ச்பேக் மாடல், 16 ஆண்டுகளுக்கு முன்பு 2000-வது ஆண்டில் அறிமுகம் செய்யபட்டது. அறிமுகம் செய்யபட்டது முதல் தற்போது வரை, மாருதி சுஸுகி ஆல்ட்டோ ஹேட்ச்பேக் விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது.

ஹூண்டாய் இயான்;

ஹூண்டாய் இயான்;

ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் இயான், சான்ட்ரோ மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யபட்டது. கூடுதல் பவர் உடைய இயான் மாடலின் இஞ்ஜின், சான்ட்ரோவை காட்டிலும் திறன் கொண்ட மாடல் ஆகும்.

ரெனோ க்விட்;

ரெனோ க்விட்;

சிறிய மாடல் கார்களில் ரெனோ க்விட் தான் முதல் இடத்தில் உள்ளது. இதன் துனிச்சலான மற்றும் கட்டு மஸ்தான டிசைன் எஸ்யூவியின் தாக்கம் கொண்டுள்ளது.

ரெனோ க்விட் காரில் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பிரத்யேகமான அம்சங்கள் உள்ளது. மேலும், பிற போட்டி மாடல்களை காட்டிலும், இது நல்ல சவால் வழங்கும் விலையில் விற்கபடுகிறது.

ஒட்டுமொத்த மதிப்பீடுகள் - சிறிய கார்கள்;

ஒட்டுமொத்த மதிப்பீடுகள் - சிறிய கார்கள்;

டாடா நானோ - 7.5/10

மாருதி ஆல்டோ 800 - 8/10

ஹூண்டாய் இயான் - 7.5/10

ரெனோ க்விட் - 8.5/10

சிறிய ஹேட்ச்பேக் கார்கள்;

சிறிய ஹேட்ச்பேக் கார்கள்;

சிறிய ஹேட்ச்பேக் கார்கள் செக்மண்ட்டில், மாருதி சுஸுகி ஆல்ட்டோ கே10, ஹூண்டாய் ஐ10, மாருதி சுஸுகி செலிரியோ மற்றும் டாடா டியாகோ இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் இடம்பிடித்த மாடல்கள், புதிய மற்றும் சிறந்த அளவில் விற்பனையாகும் கார்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யபட்டுள்ளது. ஏறக்குறைய அனைத்து மாடல்களும் சில சிறந்த அம்சங்களை கொண்டுள்ளதால், இந்த செக்மண்ட்டில் கடுமையான போட்டி நிலவுகிறது.

மாருதி ஆல்ட்டோ கே10;

மாருதி ஆல்ட்டோ கே10;

மாருதி ஆல்ட்டோ 800 டிசைனில் சில மாற்றங்களுடன் வெளியாகிய புதிய ஆல்ட்டோ கே10 கார், ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்(ஏஎம்டி.,) மாடலிலும் கிடைக்கிறது. இது குறைவான விலை ஆட்டோமேட்டிக் காராக உள்ளதால் இதன் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

செலவு செய்யும் பணத்திற்கு முழுமையான மதிப்பு கொண்ட மாடலாக உள்ளது. இந்தியாவின் மிக நமபகமான மாடலாக உள்ள இது, இதுவரை 30 லட்சம் கார்கள் விற்கபட்டுள்ளது.

டியாகோ;

டியாகோ;

டாடா மோட்டார்ஸ் வழங்கும் டாடா டியாகோ இந்த பட்டியலில் புதிய வரவாக உள்ளது. இது நல்ல அறிமுகம் விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

மேலும், இது ஹர்மன் நிறுவனம் வழங்கும் சிறந்த மியூஸிக் சிஸ்டம் கொண்டுள்ளது. மேலும், இதன் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. இந்த அம்சங்கள், மாருதி ஆல்ட்டோ கே10 மாடலில் இல்லை.

டாடா டியாகோ ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியுடன் வெளியாவதில்லை. இது இதற்கு ஒரு குறைபாடாக இருக்க வாய்ப்பு உள்ளது.

மாருதி செலிரியோ;

மாருதி செலிரியோ;

மாருதி செலிரியோ, மாருதி நிறுவனத்திற்கு மிக முக்கியமான அறிமுகமாக விளங்குகிறது. இது குறைந்த விலையிலான ஆட்டோமேட்டிக் வேரியண்ட் கார்களில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது நவீன டிசைனை கொண்டில்லாமல், பாரம்பரிய தோற்றம் கொண்டுள்ளது. எனினும், இதன் ஒட்டுமொத்த அம்சங்களும் நல்ல முறையில் வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த கார், கிளட்ச் பெடல் தொந்தரவு இல்லாத மாடலாக உள்ளது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

சற்று விலை கூடுதலாக உள்ள மாருதி செலிரியோ, ட்யூவல் ஏர் பேக்குகள், ஸ்பீட் சென்சிங் டோர் லாக்குகள், ஃப்ரண்ட் மற்றும் ரியர் பவர் விண்டோக்கள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது.

ஆனால், விலையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, டாடா டியாகோ ஹர்மன் நிறுவனத்தின் ஆடியோ சிஸ்டம் மற்றும் நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் கொண்டுள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி, இது இபிடி உடைய ஏபிஎஸ், கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கொண்டுள்ளது.

மிதமான விலை கொண்ட நிலையில், இது இன்னும் திறன் மிக்கதாக உள்ளது.

ஒட்டுமொத்த மதிப்பீடுகள் - சிறிய ஹேட்ச்பேக் கார்கள்;

ஒட்டுமொத்த மதிப்பீடுகள் - சிறிய ஹேட்ச்பேக் கார்கள்;

மாருதி சுஸுகி ஆல்ட்டோ கே10 - 7.5/10

ஹூண்டாய் ஐ10 - 7.5 / 10

மாருதி செலிரியோ - 8/10

டாடா டியாகோ - 8.5/10

ஹேட்ச்பேக்;

ஹேட்ச்பேக்;

ஹேட்ச்பேக் வகையில், இந்த பட்டியலில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10, மாருதி சுஸுகி ஸ்விப்ட், ஃபோர்டு ஃபிகோ, மஹிந்திரா கேயூவி100, ஹோண்டா பிரியோ மற்றும் ஃபியட் புன்ட்டோ இவோ ஆகிய மாடல்கள் உள்ளன.

சிறிய கார்களை தாண்டி வேறு கார்களை தேடுபவராக இருந்தால், ஹேட்பேக் அடுத்த கட்டத்தில் உள்ளன. இதில் ஒவ்வொரு மாடல்களும் அபரிவிதமான செயல் திறன் கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி ஸ்விப்ட்;

மாருதி சுஸுகி ஸ்விப்ட்;

மாருதி சுஸுகி ஸ்விப்ட், மாருதி நிறுவன கார்களின் விற்பனையில் மிகப்பெரிய பங்கு ஆற்றுகிறது. இது மிகவும் திறன்மிக்கதாக உள்ளது.

இதில் உள்ள ஏராளமான அம்சங்கள், இதன் போட்டி மாடல்களிலும் உள்ளது. எனினும், ஸ்விப்ட் மாடல் சிறந்த விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் மற்றும் ஸ்பேர்களின் தேர்வுகளை கொண்டுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10;

ஹூண்டாய் கிராண்ட் ஐ10;

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 சிறந்த தோற்றம் கொண்ட காராக உள்ளது. இதில் உள்ள நேர் வரிகள், இதை சிறிய காராக காட்டுவதை காட்டிலும், ஒரு ஹேட்ச்பேக் போல் காட்சி அளிக்க வைக்கிறது.

ஸ்விப்ட் மாடலை காட்டிலும், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 சிறந்த நிற தேர்வுகளை கொண்டுள்ளது. எனினும், செயல்திறன் விஷயத்தில், இந்த 2 மாடல்களுமே ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளது.

ஃபோர்டு ஃபிகோ;

ஃபோர்டு ஃபிகோ;

ஃபோர்டு ஃபிகோ என்ற பெயரை கேட்டாலே, நல்ல தரம் கொண்டதாக இருக்கும் என கூறலாம். இது ஏராளமான உலக தரம் வாய்ந்த சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

இது தானே மடங்கி கொள்ளும் ஓஆர்விஎம்கள், மொபைல்ஃபோனை தேக்கி கொள்ளும் மைஃபோர்டுடாக், எம்பி3 பிளேயர் அல்லது சேட்டலைட் நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது. இவை அனைத்தும் காரின் எண்டர்டெயின்மண்ட் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கபட்டுள்ளது.

ஹோண்டா பிரியோ;

ஹோண்டா பிரியோ;

ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா மூலம், ஹோண்டா பிரியோ தயாரிக்கப்படுவதால், இது சிறந்த இஞ்ஜினியரிங் தரம் கொண்டதாக உள்ளது. இதில் கேபின் ஸ்பேஸ் தட்டுபாடு உள்ளது. இது அவ்வளவு தாராளமான இட அமைப்பு இல்லாத மாடல் ஆகும்.

மேலும், இது 5-ஸீட்டர் காராக உள்ளதால், நிறைய சவால்கள் உள்ளது. இதன் போட்டி மாடல்களுடன் ஒப்பிடுகையில், இது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வெளியாவதால், இது இதன் போட்டி மாடல்களில் இருந்து தனித்து பிரத்யேகமாக உள்ளது. இது இயக்க சுலபமாக உள்ளதால், ஏராளமான பெண் ஓட்டுநர்கள் இதை பெரிதும் விரும்பி வாங்க வாய்ப்பு உண்டு.

மஹிந்திரா கேயூவி100;

மஹிந்திரா கேயூவி100;

மஹிந்திரா கேயூவி100, ஹேட்ச்பேக்காக இருப்பதை காட்டிலும், அதிகப்படியாக எஸ்யூவி போல் உள்ளது. ஹேட்ச்பேக் காரை வாங்க விரும்பி, ஆனால் ஹேட்ச்பேக்கை சொந்தம் கொண்டாட விரும்பினால், மஹிந்திரா கேயூவி100 உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

மஹிந்திரா கேயூவி100, நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ், டிஆர்எல், சிறந்த தேக்கி கொள்ளும் வசதி, 6 ஸீட்டர் உள்ளிட்ட ஏராளமான பிரத்யேக அம்சங்களை கொண்டுள்ளது.

இது, கூடுதல் செயல்திறனுக்கு பவர் மற்றும் இகோ என 2 மோட்கள் கொண்டுள்ளது. மேலும், மேம்பட்ட செயல்திறனுக்கு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

ஃபியட் புன்ட்டோ இவோ;

ஃபியட் புன்ட்டோ இவோ;

ஃபியட் புன்ட்டோ இவோ ஒரு அருமையான கட்டமைப்பு கொண்ட காராக உள்ளது. இது எல்லா வகையிலும் திடமான காராக உள்ளது. இது சிறந்த கட்டமைப்பு கொண்டுள்ளதாலும், சிறந்த இண்டீரியர் கொண்டுள்ளதாலும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

இது மிதமான செயல்திறன் கொண்டிருந்தாலும், அதிக அளவிற்கு இதை இயக்கும் போது, நல்ல பெர்ஃபார்மன்ஸ் வழங்குகிறது. ரைட் மற்றும் டிரைவிங் விஷயத்தில், இது டிரைவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்க கூடிய காராக உள்ளது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

ஒட்டுமொத்த பேக்கேஜ் அடிப்படையில், அனைத்து ஹேட்ச்பேக்குகளும் ஒன்றுக்கு ஒன்று கடுமையான போட்டியில் உள்ளன. விலை விஷயத்தில், ஃபியட் புன்ட்டோ இவோ மற்றும் ஹோண்டா பிரியோ, ஃபோர்டு ஃபிகோ, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 உள்ளிட்ட மாடல்கள் அனைத்தும் விலை அதிகமானதாக உள்ளது. இதனால், மஹிந்திரா கேயூவி100 மற்றும் மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஆகிய மாடல்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன. அந்த வகையில் மஹிந்திரா கேயூவி100 கார் 20,000 குறைவான விலையில் கிடைக்கிறது.

தோற்றம் பற்றி யோசிக்காமல் இருந்தால், மஹிந்திரா கேயூவி100 கொடுக்கும் காசுக்கு சிறந்த மதிப்புமிக்க காராக உள்ளது. மாருதி சுஸுகி ஸ்விப்ட் நல்ல தோற்றம் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல், விலை குறைந்த ஸ்பேர்கள் மற்றும் சிறந்த விற்பனைக்கு பிந்தைய சேவை கிடைக்கிறது. நீங்கள் ஆராய்ச்சி செய்ய விரும்பினாலோ அல்லது எஸ்யூவி அம்சங்கள் விரும்பினாலோ, மஹிந்திரா கேயூவி100 கார், கொடுக்கும் காசுக்கு சிறந்த காராக விளங்குகிறது.

ஒட்டுமொத்த மதிப்பீடுகள் - ஹேட்ச்பேக் கார்கள்;

ஒட்டுமொத்த மதிப்பீடுகள் - ஹேட்ச்பேக் கார்கள்;

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 - 7.5/10

மாருதி சுஸுகி ஸ்விப்ட் - 8/10

ஃபோர்டு ஃபிகோ - 7.5/10

ஹோண்டா பிரியோ - 7.5/10

ஃபியட் புன்ட்டோ இவோ - 7.5/10

மஹிந்திரா கேயூவி100 - 8.5/10

பிரிமியம் ஹேட்ச்பேக்;

பிரிமியம் ஹேட்ச்பேக்;

கடந்த சில காலமாகவே, பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போட்டியில் இருந்து விலகிடாமல் இருக்க ஒவ்வொரு கார் உற்பத்தியாளரும், ஒரு காரையாவது அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்த பட்டியலில், மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் முக்கிய மாடல்களாக உள்ளன. மாருதி பலேனோ தான் இந்த செக்மண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனாலும் செயல்திறன் மற்றும் அம்சங்களின் அடிப்படையில் ஹூண்டாய் எலைட் ஐ20 சிறந்ததாக உள்ளது.

மாருதி சுஸுகி பலேனோ;

மாருதி சுஸுகி பலேனோ;

மாருதி சுஸுகி பலேனோ வட்டமான டிசைன் சித்தாந்தம் கொண்டுள்ளது. இதன் வீங்கியது போன்ற தோற்றம் அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும், இதன் செக்மண்ட்டிற்கு ஏற்றவாறு உள்ளது.

ஹூண்டாய் எலைட் ஐ20;

ஹூண்டாய் எலைட் ஐ20;

ஹூண்டாய் எலைட் ஐ20, ஹூண்டாய் நிறுவனத்தின் ஃப்ளூயிடிக் டிசைன் கொண்டுள்ளது. இதன் ஹெட்லேம்ப்களும், டெயில்லேம்ப்களும் பிரமாதமாக உள்ளது.

ஹோண்டா ஜாஸ்;

ஹோண்டா ஜாஸ்;

இந்த 3 மாடல்களில், ஹோண்டா ஜாஸ் சிறந்த தோற்றம் கொண்டுள்ளது. கூர்மையான டிசைன் கொண்ட இதற்கு ஹோண்டாவின் விங் (இறக்கை) போன்ற டிசைன் சித்தாந்தம் கொண்டுள்ளது.

ஒப்பீடு;

ஒப்பீடு;

அம்சங்கள் அடிப்படையிலும், பாதுகாப்பு அம்சங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் இண்டீரியர் ஆகிய அம்சங்களின் அடிப்படையில், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 சமமாக உள்ளது என்றே கூறலாம்.

ஹோண்டா ஜாஸ் மாடலும் ஏறக்குறைய அனைத்து அம்சங்களுடன் வெளியாகிறது. இதன் டாப் எண்ட் ஆட்டோமேட்டிக் வேரியண்ட், ஹோண்டா ஜாஸ் மாடலுக்கே உரிய பேடில் ஷிஃப்டர்களுடன் வெளியாகிறது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

டிசைன், அம்சங்கள், செயல் திறன், விற்பனைக்கு பிந்தைய சேவை மற்றும் விலைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் மனதில் வைத்து ஒப்பிடும் போது, பலேனோ தான் கொடுக்கும் காசுக்கு, அதிக மதிப்பு வழங்கும் காராக உள்ளது.

ஒட்டுமொத்த மதிப்பீடுகள் - பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள்;

ஒட்டுமொத்த மதிப்பீடுகள் - பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள்;

ஹூண்டாய் எலைட் ஐ20 - 7.5/10

ஹோண்டா ஜாஸ் - 7.5/10

மாருதி சுஸுகி பலேனோ - 8/10

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி தொடர்புடைய செய்திகள்

டாடா தொடர்புடைய செய்திகள்

மஹிந்திரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Buying Cars are like everyone's dream. Cars are generally categorised as Small Cars, Small Hatchback Cars, Hatchback Cars and Premium Hatchback Cars. All Cars have their uniqueness. Depending upon the Prices, Features, Specifications, Service, Spares and other various factors, let us look top Best Value for Money Cars in India 2016. To know more, check here...
Story first published: Wednesday, April 20, 2016, 21:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X