டொயோட்டா இன்னோவாவில் பெட்ரோலா, டீசலா? எது சிறந்தது

By Saravana

ஓர் சிறப்பான எம்பிவி காரான டொயோட்டா இன்னோவாவை விரும்புவதற்கு பல காரணங்களை முன் வைக்கலாம். இடவசதி, சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு, வசதிகள் என அனைத்திலும் நிறைவான எம்பிவி கார் மாடல் இன்னோவா.

இந்தநிலையில், டொயோட்டா இன்னோவா காரின் பெட்ரோல் மாடல் பற்றி எமது வாசகர் சந்துரு என்பவர் வினவியிருந்தார். அதனடிப்படையில், இன்னோவாவில் டீசல் மாடல் சிறந்ததா அல்லது பெட்ரோல்தான் சிறந்ததா என்பது குறித்து முக்கிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.


முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

எஞ்சின், மைலேஜ், விலை உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் மற்றும் பயன்பாட்டை பொறுத்து எந்த மாடலை தேர்வு செய்வது என்பதை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மாடலில் 1998சிசி 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 131 பிஎச்பி பவரையும், 181 என்எம் டார்க்கையும் வழங்கும். அதேநேரத்தில், டீசல் மாடலில் 2,494சிசி டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 101பிஎச்பி பவரையும், 200என்எம் டார்க்கையும் வழங்கும். இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இருக்கின்றன. டீசல் மாடல் அதிக டார்க்கை வழங்குவதால், ஆக்சிலரேசனில் டீசல் மாடல் சிறப்பாக இருக்கும். நகர்ப்புறங்களிலும், நெடுஞ்சாலைகளில் ஓவர்டேக் செய்வதற்கும் உடனடி பிக்கப்பை டீசல் மாடலில் பெறலாம்.

கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

பெட்ரோல் மாடலைவிட டீசல் மாடலில் கியர் ரேஷியோ சிறப்பாக இருப்பதால், அடிக்கடி கியரை மாற்ற வேண்டியிருக்காது. எனவே, நெடுஞ்சாலையில் இயக்குவதற்கு எளிதாக இருக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 11.4 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 12.99 கிமீ மைலேஜையும் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இரு மாடலுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 7 - 8 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 10 -12 கிமீ மைலேஜையும் தரும். மேலும், பெட்ரோல் மாடலில் ஏசி போட்டு செல்லும்போது மைலேஜ் வெகுவாக குறையும். டீசல் மாடலில் ஏசி போட்டாலும், மைலேஜில் அதிக வித்தியாசம் ஏற்படாது.

கேபின் சப்தம்

கேபின் சப்தம்

டீசல் மாடலைவிட பெட்ரோல் மாடல் அதிர்வுகள் குறைவு என்பதை மறுக்க இயலாது. அதேநேரத்தில், பெட்ரோல் மாடலுக்கு இணையாக தற்போது டீசல் இன்னோவாவின் கேபின் இன்சுலேஷன் மேம்படுத்தப்பட்டு வருவதால், சப்சம் மிக மிக குறைவாக இருக்கும்.

 பராமரிப்பு செலவு

பராமரிப்பு செலவு

தற்போது சிறப்பான தொழில்நுட்பத்துடன் கூடிய டீசல் எஞ்சின் இன்னோவாவில் பொருத்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடலைவிட சற்றே கூடுதலான பராமரிப்பு செலவீனம் கொண்டதாக இருக்கிறது. அதாவது, பராமரிப்பு செலவினத்தில் பெட்ரோல், டீசல் மாடல்களுக்கு இடையில் பெரிய வித்தியாசம் இருக்காது.

 விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் பேஸ் வேரியண்ட்டுகளை ஒப்பிடும்போது, ரூ.70,000 வரை விலை வித்தியாசம் இருக்கின்றது. ஆனால், பெட்ரோல் பேஸ் வேரியண்ட்டில் இருக்கும் வசதிகள், டீசல் பேஸ் வேரியண்ட்டில் இல்லை. எனவே, வசதிகள் நிறைந்த டீசல் வேரியண்ட்டை தேர்வு செய்யும்போது விலை வித்தியாசம் ரூ.2 லட்சம் வரை கூடுதலாக இருக்கிறது.

பயன்பாடு

பயன்பாடு

பயன்பாட்டை பொறுத்து பெட்ரோல் மாடலா அல்லது டீசல் மாடலை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுவது இயல்பு. மேலும், கார் வாங்கிய மூன்று ஆண்டுகளில் டீசல் மாடலுக்கு கொடுக்கும் கூடுதல் விலையை பெட்ரோல் மாடல் நிறைவு செய்யும் என்றும் கூறுவர். ஆனால், இன்னோவாவில் அப்படி பார்க்க முடியாது. ஏன் என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

மறுவிற்பனை மதிப்பு

மறுவிற்பனை மதிப்பு

யூஸ்டு கார் மார்க்கெட்டில் டொயோட்டா இன்னோவா பெட்ரோல் மாடலுக்கு மதிப்பு இல்லை. தற்போது இன்னோவா பெட்ரோல் மாடலை வைத்திருப்பவர்கள் விற்பதற்கு கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். அதேநேரத்தில், டீசல் இன்னோவாவுக்கு அதிக மவுசு இருக்கிறது. எனவே, விற்பனையின்போது டீசல் இன்னோவா கார் மார்க்கெட் மதிப்பில் எளிதாக விற்பனை செய்ய முடியும்.

எது சிறந்தது?

எது சிறந்தது?

அதிக டார்க்கை வழங்கும் எஞ்சின் என்பதால், போக்குவரத்து நெரிசல், நெடுஞ்சாலை என இரண்டிலும் டீசல் இன்னோவா சிறப்பாக இருக்கும். மைலேஜிலும் தன்னிறைவை கொடுப்பதோடு, மறுவிற்பனை செய்யும்போது மதிப்பு குறையாது. பயன்பாட்டை பொறுத்து இந்த இன்னோவா காரை வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்காது. பராமரிப்பு, ஆரம்ப முதலீடு போன்றவற்றில் கூடுதலாக இருந்தாலும், மைலேஜ், ரீசேல் மதிப்பு போன்ற பல முக்கிய விஷயங்களை வைத்து தேர்வு செய்யும்போது, இன்னோவா டீசல் மாடலை தேர்வு செய்வதே நல்லது.

தனிப்பட்ட விருப்பம்

தனிப்பட்ட விருப்பம்

தனிப்பட்ட விருப்பத்தின்பேரிலும், வசதிகள், குறைவான பயன்பாடு மற்றும் பட்ஜெட்டை பொறுத்து இந்த தேர்வு மாறுபடலாம். உங்களது கருத்துக்களையும் கருத்துப் பெட்டியில் பகிர்ந்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
Should you buy an Innova petrol or diesel? We highlight a few points which will help you arrive at the right decision.
Story first published: Tuesday, November 18, 2014, 16:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X