புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் எப்படி இருக்கிறது... ஒரு ரவுண்டு பார்த்துடலாம்!

By Saravana Rajan

விலையும், பராமரிப்பு செலவும் குறைவான செடான் ரக கார் வேண்டும் என்று விரும்பிய நடுத்தர வர்க்க மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அறிமுகமான காம்பேக்ட் ரக செடான் கார்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸென்ட், டாடா ஸெஸ்ட் மற்றும் ஃபோர்டு ஆஸ்பயர் என தொடர்ந்து புதிய காம்பேக்ட் செடான் கார்கள் களமிறங்கப்பட்டு வந்தது.

அந்த வகையில், சமீபத்தில் களமிறங்கியிருக்கும் மாடல்தான் ஃபோக்ஸ்வேகன் அமியோ. இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் தடுமாறி வரும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய அமியோ கார் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளது. அந்த நம்பிக்கையையும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் இந்த கார் பூர்த்தி செய்யுமா என்பதை அலசும் விதமாக இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறோம். தற்போது பெட்ரோல் மாடலில் மட்டும் வந்திருக்கும் புதிய அமியோ காரின் சாதக, பாதகங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

டிசைன்

டிசைன்

காம்பேக்ட் செடான் கார்களிலேயே லட்சணமான முக அமைப்பு கொண்ட மாடல்களில் அமியோ முதன்மையாக கூறலாம். ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் அடிப்படையிலான மாடலாக இருந்தாலும், சில மாற்றங்கள் செய்யப்பட்டு வேறுபடுத்தப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பிரிமியம் கார் மாடல் போன்ற தோற்றத்தை ஒட்டுமொத்த டிசைனிலும் பிரதிபலிக்கிறது ஃபோக்ஸ்வேகன் அமியோ. எனவே, வாடிக்கையாளர்களை இதன் டிசைன் நிச்சயம் கவரும் எனலாம்.

இன்டீரியர்

இன்டீரியர்

இரட்டை வண்ணக் கலவையில் காட்சி தரும் டேஷ்போர்டு அமைப்பு மிகவும் கவர்ச்சியாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. டேஷ்போர்டு பிளாஸ்டிக்கின் தரம், இந்த செக்மென்ட்டிலேயே சிறப்பானதாக கூறலாம். தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் இந்த காரின் இன்டீரியருக்கு மதிப்பும், கவர்ச்சியும் சேர்க்கும் முக்கிய விஷயம். ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

வெளியில் மட்டுமல்ல, உட்புறத்திலும் நவீன வகை காராக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. சென்டர் கன்சோலின் நடுநாயகமாக எல்சிடி தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆடியோ சிஸ்டம் மட்டுமின்றி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மூலமாக பின்புறத்தை காட்டும் திரையாகவும் இது செயல்படுகிறது.

முன் இருக்கை

முன் இருக்கை

முன் இருக்கை சொகுசானதாக இருக்கிறது. அதேநேரத்தில் தாழ்வாக இருப்பதால் நீண்ட தூரம் பயணிக்கும்போது உயரமானவர்களுக்கு கால் வைக்கும் இடம் சற்று சவுகரிய குறைச்சலாக இருக்கலாம். முன் இருக்கைகளுக்கு நடுவில் கையை ஓய்வாக வைத்துக் கொள்வதற்கான ஆர்ம் ரெஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது ஸ்டோரேஜ் வசதியுடன் இருப்பதால், மொபைல்போன் மற்றும் இதர பொருட்களை வைத்துக் கொள்ள முடியும்.

பின் இருக்கை

பின் இருக்கை

பின் இருக்கை மிகவும் சொகுசாக இருக்கிறது. அதேநேரத்தில், டிசையர் போலவே கால் வைக்கும் இடம் சற்று நெருக்கடியாகவே இருக்கிறது. மேலும், பின் இருக்கையில் ஆர்ம் ரெஸ்ட் வசதி இல்லை. பின் இருக்கை பயணிகளுக்காக தனி ஏசி வென்ட் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. இதனால், கேபின் விரைவாகவும், சிறப்பாகவும் குளிர்ச்சியடைகிறது.

ஸ்டோரேஜ் வசதி

ஸ்டோரேஜ் வசதி

முன்புற கதவுகளில் 1.5 லிட்டர் வாட்டர் பாட்டில்களை வைக்கும் டோர் பாக்கெட்டுகளில் இடவசதி உள்ளது. பர்ஸ், சாவி உள்ளிட்டவற்றையும் வைத்துக் கொள்ள முடியும். அதேநேரத்தில், பின்புறத்தில் டோர் பாக்கெட்டுகள் மிகவும் சிறியதாக இருக்கிறது. எனவே, அரை லிட்டர் பாட்டில்களை வைக்க மட்டுமே இடவசதி உள்ளது.

பூட் ரூம்

பூட் ரூம்

உடைமைகளையும், பொருட்களையும் வைத்து எடுத்துச் செல்வதற்கு 330 லிட்டர் கொள்ளளவு உடைய பூட் ஸ்பேஸ் இருக்கிறது. இது நீண்ட தூர பயணங்களுக்கு போதிய உடைமைகளை எடுத்துச் செல்ல வசதியாக அமையும்.

எஞ்சின்

எஞ்சின்

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 75 பிஎஸ் பவரையும், 110 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. டீசல் மாடல் பின்னர் விற்பனைக்கு வர இருக்கிறது.

செயல்திறன்

செயல்திறன்

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆரம்ப நிலைகளில் சிறப்பான பிக்கப்பை தருகிறது. ஆனால், அதிவேகத்தில் செல்லும்போது உடனடி பிக்கப் தரவில்லை என்பதோடு, இந்த காருக்கு கூடுதல் திறன் தேவைப்படுவதை உணர்த்துவதாக இருந்தது. மேலும், 120 கிலோமீட்டர் வேகத்தை தாண்டுவதற்கு ஜென்ம பிரத்யேனப்படுகிறது. அத்துடன், உடனடி பிக்கப் இல்லாததால், ஓவர்டேக் செய்வதற்கு கியரை குறைக்க வேண்டியிருக்கிறது. நகரத்திற்குள் ஓட்டுவதற்கு சிறப்பாக உள்ளது.

கையாளுமை

கையாளுமை

கியர் மாற்றுவது மென்மையாக இருப்பதுடன், வேகம் அதிகரிக்கும்போது ஸ்டீயரிங் வீல் நம்பிக்கையுடன் ஓட்ட உதவுகிறது. இதன் சஸ்பென்ஷன் பள்ளம், மேடுகளை எளிதாக கடக்க உதவுகிறது. இந்த காரின் கையாளுமை எதிர்பார்த்த அளவு இல்லை. போலோ, வென்ட்டோ கார்கள் போன்று இல்லாமல், கேபினுக்குள் சப்தமும், அதிர்வுகளும் சற்று அதிகமாக இருக்கிறது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 15 இன்ச் சக்கரங்கள் மூலமாக அனைத்து சாலைகளையும் எளிதாக எதிர்கொள்கிறது அமியோ.

மைலேஜ்

மைலேஜ்

அமியோ பெட்ரோல் மாடல் லிட்டரு்கு 17.83 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று கூறுகிறது. ஆனால், நடைமுறையில் இதைவிட குறைவுதான். நகர்ப்புறம், நெடுஞ்சாலை, கரடு முரடான சாலைகள் என அனைத்து சாலைநிலைகளிலும் சராசரியாக லிட்டருக்கு 13.0 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது ஃபோக்ஸ்வேகன் அமியோ கார்.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் டிரம் பிரேக்குளும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த பிரேக் சிஸ்டம் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் அதேவேளையில், இதில் பொருத்தப்பட்டிருக்கும் எம்ஆர்எஃப் டயர்கள் எதிர்பார்த்த அளவு தரைப் பிடிமானத்தை வழங்கவில்லை. சமயத்தில் சறுக்குகிறது. கார் பிடிபடும் வரை இது சற்று பிரச்னையாகவே இருக்கும்.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த செக்மென்ட்டில் மிகவும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது அமியோ. மேலும், ஃபோக்ஸ்வேகனின் கட்டுமானத் தரமும், தரமான பாகங்களும் இந்த காருக்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.

முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

டாப் வேரியண்ட் எனப்படும் உயர்வகை அமியோ காரில் அலாய் வீல்கள், கீ லெஸ் என்ட்ரி வசதி, வளைவில் திரும்பும்போது அதே திசையில் வெளிச்சத்தை வழங்கும் ஹெட்லைட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், வாய்ஸ் கமாண்ட் வசதி, குளிரூட்டும் வசதி கொண்ட க்ளவ் பாக்ஸ், ரிவர்ஸ் சென்சார், ரிவர்ஸ் கேமரா போன்ற பல வசதிகளை கொண்டிருக்கிறது. போட்டியாளர்களைவிட அதிக வசதிகள் கொண்ட கார்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் எதிர்பார்த்ததைவிட குறைவான விலையில் வந்திருப்பதும். ஆம், ஃபோக்ஸ்வேகன் போலோ காரைவிட இது ரூ.30,000 வரை குறைவு என்பதுடன், போட்டியாளர்களுக்கும் மிக சவாலான விலையிலேயே நிறைந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வந்திருப்பது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

மதிப்பு

மதிப்பு

டிசைன், வசதிகள், பாதுகாப்பு, விலை என அனைத்திலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக வந்திருக்கிறது ஃபோக்ஸ்வேகன் அமியோ. அதேவேளை, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது விற்பனைக்கு பிந்தைய சேவை தரத்தையும், டீலர்ஷிப் எண்ணிக்கையையும் மேம்படுத்தினார், மார்க்கெட்டில் அமியோ கார் மிகச்சிறந்த தேர்வாக அமையும்.

சிறப்புத் தகவல்கள்

சிறப்புத் தகவல்கள்

ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்ட்டோ கார்களுக்கு இடையிலான ரகத்தில் புதிய அமியோ நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. போலோ, வென்ட்டோ வடிவமைக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த காருக்காக ரூ.720 கோடியை ஃபோக்ஸ்வேகன் முதலீடு செய்துள்ளது.

ஃபோர்டு ஆஸ்பயர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

ஃபோர்டு ஆஸ்பயர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

Most Read Articles
English summary
Volkswagen Ameo Petrol Model Review In Tamil.
Story first published: Thursday, June 16, 2016, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X