செய்யாறு மகிந்திரா கார் தொழிற்சாலைக்கு அனுமதி

Cabinet approves Mahindra's car manufacturing unit in Cheyyar
சென்னை: செய்யார் அருகே அமையவுள்ள மகிந்திரா நிறுவனத்தின் ரூ.1800 கோடி மதிப்பிலான புதிய கார் தொழிற்சாலைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. தமிழக முதல்வர் கருணாநிதி இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், புதிய கார் தயாரிப்பு ஆலைக்கு அனுமதி அளிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு மாநில அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மோட்டார் வாகன நிறுவனங்கள், தொழிற்சாலையை அமைத்து உற்பத்தியை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், மோட்டார் வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள மகிந்திரா நிறுவனம், இங்கு ரூ.1,800 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க மாநில அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

இது பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. இந்த ஆலையை அமைக்க அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகே உள்ள செய்யாரில் இந்த ஆலை அமைகிறது.

இதுகுறித்து மகிந்திரா நிறுவனமும் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Story first published: Friday, November 13, 2009, 12:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X