இந்தியாவில் டிரக் விற்க வரும் இசுசூ, ஹினோ, எப்.ஏ.டபுள்யூ, பொடான் :

By
India Commercial Vehicle
மும்பை: ஜப்பானிய டிரக் தயாரிப்பாளர்களான இசுசூ, ஹினோ மற்றும் சீன டிரக் தயாரிப்பாளர்களான எப்.ஏ.டபுள்யூ, பொடான் நிறுவனங்கள் இந்தியாவில் காலடி எடுத்து வைக்கத் திட்டமிட்டுள்ளன.

இந்த ஜப்பானிய, சீன வர்த்தக வாகன தயாரிப்பாளர்களின் உயர் அதிகாரிகள் ஏற்கனவே இந்தியாவிற்கு வந்து கூட்டமைப்பு வைப்பதற்கும் அல்லது மற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து விநியோகம் மற்றும் விற்பனை செய்வதற்கும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

டொயோடா குரூபின் அங்கமான ஹினோ மோட்டார்ஸ் சுமார் 200 பிரிமியம் ரக வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இதில் ஒரு வாகனத்தின் விலை ரூ. 35 லட்சம். இந்த வாகனங்கள் சுரங்கம், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளை குறி வைத்துள்ளது. ஹினோ மோட்டார்ஸ் இந்தியாவில் தனது தொழிற்சாலையையே அமைக்க திட்டமிட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவிலும், மத்திய கிழக்கு சந்தைகளிலும் ஹினோ மோட்டார்ஸுக்கு பெரிய பங்குள்ளது. இந்த சந்தைகளில் டட்ரோ, டைனா, ஹினோ உள்ளிட்ட 16-49 டன் கன ரக வாகனங்கள் உள்ளன. இசுசூ சிறிய வர்த்தக வாகனங்கள் மற்றும் பேருந்துகளை அறிமுகம் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது.

சீன டிரக் தயாரிப்பாளரான பொடான் நிறவனத்திடம் போர்லேன்ட் வரிசை வாகனங்கள் உள்ளன. புனேவில் ஒரு தொழிற்சாலையை அமைத்து இந்திய வர்த்தக வாகனப் பிரிவில் நேரடியாக நுழையத் தி்ட்டமிட்டுள்ளது.

எப்.ஏ.டபுள்யூ. உரால் இந்தியாவுடன் கூட்டு வைத்து பேருந்துகள், டம்பர்கள், தாழ் தள பேருந்துகள் மற்றும் டிரக்குகளைத் தயாரிக்க உள்ளது. எஸ்.ஏ.ஐ.சி. ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவுடன் சேர்ந்து வுலிங் ரக டிரக்குகளை இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்திய டிரக் சந்தையில் கிராக்கி அதிகம் உள்ளது. அதி வேகமாக வளர்ந்து வரும் இந்தியச் சந்தை தான் வர்த்தக வாகன நிறுவனங்களின் விருப்பமான இடமாக உள்ளது.

வர்த்தகப் பிரிவில் என்ன தான் புதிய கம்பெனிகள் வந்தாலும், இந்திய கம்பெனிகளான அசோக் லேலாண்டு, டாடா மோட்டார்ஸ, மஹிந்திரா மற்றும் வோல்வோ-ஐசர் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும், இனி வரும் வருடங்களிலும் அந்த வளர்ச்சி தொடரும்.

நடுத்தரம் மற்றும் கன ரக வாகனங்களின் விற்பனை 74 சதவிகிதமாக அதிகரித்து 95,784 யூனிட்கள் விற்றுள்ளது. எல்.சி.வி. வாகனங்களின் விற்பனை 33 சதவிகிதமாக அதிகரித்து 1.05 லட்சம் யூனிட்கள் விற்றுள்ளது. இந்நிலையில், சீனா மற்றும் ஜப்பான் நிறவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்கத் தொடங்கிவிட்டால் உள்நாட்டு நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்கக்கூடும்.

Most Read Articles
Story first published: Monday, August 23, 2010, 16:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X