மாருதியின் ஹைபிரிட் கார் எஸ்எக்ஸ்4, ஈகோ அறிமுகம்

Maruti SX4 Hybrid
நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் தனது ஹைபிரிட் காரை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் பெயர் எஸ்எக்ஸ்4. இன்னொரு காரின் பெயர் ஈகோ.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாரம்பரிய எரிபொருள் வசதி தொழில்நுட்பத்துடன்,, மாற்று எரிபொருளை பயன்படுத்தும் வசதியையும் சேர்த்து உருவாக்கப்படுவதே ஹைபிரிட் கார்களாகும். இந்தத் தொழில்நுட்பத்தால், எரிபொருள் மாசு அடியோடு குறைகிறது. சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியமான வாகனங்களாக இவை திகழ்கின்றன.

தனது ஹைபிரிட் எஸ்எக்ஸ்4 கார் மூலம், வழக்கமான பெட்ரோல் கார்களை விட 25 சதவீத அளவுக்கு கூடுதலாக எரிபொருளை சேமிக்க முடியும் என கூறுகிறது மாருதி.

அதேபோல மாருதியின் ஈகோ எலக்ட்ரிக் கார்களில், ஒருமுறை லித்தியன் அயன் பாட்டரியை சார்ஜ் செய்வதன் மூலம் 100 கிலோமீட்டர் வரை போகலாம் என்கிறது மாருதி.

சுற்றுச்சூழலுக்கு சாதகமான வாகனங்களைத் தயாரிப்பதற்காக மாருதிக்கு மத்திய அரசு அளித்த மானிய உதவியைக் கொண்டு ஈகோ மற்றும் எஸ்எக்ஸ்4 கார்களை உருவாக்கியுள்ளது மாருதி.

தேசிய ஹைபிரிட் புரபல்சன் திட்டம் மற்றும் ஹை எனர்ஜி டென்சிட்டி பேட்டரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த ஹைபிரிட் கார்களை உருவாக்கியுள்ளது மாருதி.

மாருதியின் ஹைபிரிட் கார்கள் வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் 25 என்ஜீனியர்கள் கொண்ட குழு பங்கேற்றதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X