அடுத்த ஆண்டுக்குள் 5 புதிய மாடல்கள் அறிமுகம்: ரெனால்ட் அறிவிப்பு

By
Renault
சென்னை: அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் 5 புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரான்ஸ் நாட்டு கார் தயாரிப்பாளரான ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கார் விற்பனையில் ஈடுபட்டு வந்தது. மஹிந்திரா-ரெனால்ட் கூட்டு குழுமம் அறிமுகப்படுத்திய செடான் ரக காரான லோகன் இந்திய சந்தையில் எடுபடவில்லை.

லோகன் விற்பனைக்கு மஹிந்திரா முக்கியத்துவம் கொடுப்பதில்லை என ரினால்ட் குற்றம்சாட்டியது. இதனால், மஹிந்திரா-ரெனால்ட் கூட்டணி உடைந்தது. இதையடுத்து,இந்திய சந்தையில் தனித்து களமிறங்க முடிவு செய்துள்ள ரெனால்ட் நிறுவனம், அடுத்த ஆண்டுக்குள் 5 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரெனால்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியதாவது:

"அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் 5 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதில்,முதலாவதாக ஃபுளுயன்ஸ் மாடல் அறிமுகப்படுத்தப்படும். இதற்கடுத்து, கோலியோஸ் எஸ்யூவீ அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

கார் உற்பத்திக்காக நிசான் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்த அடிப்படையில், ரூ.4,500கோடி முதலீட்டில் சென்னைக்கு அருகில் தொழிற்சாலை அமைத்து வருகிறோம். இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்ததாக இருக்கும்.

ஃபுளுயன்ஸ் காரை அறிமுகம் செய்வதற்கு முன்பு,தற்போதுள்ள டீலர் எண்ணிக்கையை 10ஆக உயர்த்தப்படும்.அடுத்த ஆண்டுக்குள் டீலர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்த்தப்படும். வரும் 10 ஆண்டுகளுக்குள் இந்திய சந்தையில் 5 சதவீத இடத்தை பெற திட்டமிட்டுள்ளோம்,"என்று கூறினார்.

Most Read Articles
English summary
Within the next year there will be five new models from Renault in the Indian market as the company is shelling Rs4500 crore for erecting the manufacturing plant near Chennai.The plant is in the offing with the JV from Nissan and the target for the coming five years will be 70000 units. The MD of the company said the company’s plan is to erect the manufacturing plant at this investment to yield the annual capacity of 4 lakhs every year.
Story first published: Saturday, February 26, 2011, 11:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X