மேம்படுத்திய அவுட்லேண்டரின் படங்களை வெளியிட்ட மிட்சுபிஷி

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2012, 10:02 [IST]
Mitsubishi Outlander
எஸ்யூவின்னா இப்படித்தான் இருக்கணும் என்று கூறும் அளவுக்கு அவுட்லேண்டரை மறுவடிவமைப்பு செய்துள்ளது மிட்சுபிஷி. அடுத்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய எஸ்யூவியின் புகைப்படங்களை மிட்சுபிஷி முன்னதாகவே வெளியிட்டுள்ளது.

புகைப்படங்களை பார்த்தவுடன் கண்டிப்பாக இந்த புதிய மாடல் அவுட்லேண்டர் வாடிக்கையாளர்களை கிறங்கடிக்கும் என்று ஆணித்தரமாக கூறும் அளவுக்கு மாற்றங்கள் கண்டிருக்கிறது. மிட்சுபிஷியின் தயாரிப்புகளில் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாடலான அவுட்லேண்டரை மிக கவனமாக பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளது மிட்சுபிஷி.

மேலும், புதிய அவுட்லேண்டர் 2.0 லிட்டர் எம்ஐவிஇசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஐவிஇசி டீசல் எஞ்சினுடன் வருகிறது. ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த எஞ்சின்கள்தான் என்றாலும் டியூனிங் செய்து அறிமுகப்படுத்துகிறது மிட்சுபிஷி. தவிர, சுற்றுச்சூழலுக்கு தகுந்த இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் கொண்ட மாடலும் வருகிறது.

ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், பார்வார்டு கொலிஷன் மிட்டிகேஷன் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம் போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய அவுட்லேண்டர் வருகிறது. தவிர, 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்மிஷன் சிஸ்டம் கியர் பாக்சை கொண்டிருக்கும்.

ஸினான் ஹெட்லைட்டுகள், மல்டி பங்ஷன் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களும் அவுட்லேண்டரின் புதுமைக்கு சில உதாரணங்கள். இதுதவிர, ஏராளமான புதிய வசதிகளுடன் அவுட்லேண்டர் எஸ்யூவியை பற்றிய தகவல்களை மிட்சுபிஷி வெளியிட்டுள்ளது.
English summary
The Mitsubishi Outlander which was set for a refresher has arrived. The Japanese carmaker has unveiled images of its Luxury sporty utility vehicle one month before its debut at the Geneva motor show. The 2012 Outlander was previously displayed as the PX-MiEV II concept at the Tokyo Motor Show. The Outlander has been one of the mainstay models in the Mitsubishi line up. Although Mitsubishi made its name as a rally specialist with the Lancer, it has been the Outlander that has reached more people across the globe. The 2012 Outlander promises to offer more than the current model as it will be getting two brand new engines.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !