கார்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!

Posted by:

கார்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பற்றி ஆராய்ந்ததில் கிடைத்த சில தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

முதல் 4 ஸ்ட்ரோக் எஞ்சின், முதல் ஆட்டோ இன்ஸ்யூரன்ஸ் உள்பட பல சுவாரஸ்ய தகவல்களை ஸ்லைடரில் அறிந்து கொள்ளலாம்.


காற்றுப் பைகள் பற்றிய உண்மை

கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் உயிர் காக்கும் காற்றுப் பைகள்(ஏர்பேக்) விபத்து ஏற்படும்போது 40 மில்லி செகண்டில் (வினாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு) விரிந்து பயணியை பாதுகாக்கும்.

அமெரிக்காவில் உற்பத்தியான முதல் ஜப்பானிய கார்

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டட முதல் ஜப்பானிய கார் ஹோண்டா அக்கார்டு. 1982ம் ஆண்டு இந்த கார் அமெரிக்காவில் உற்பத்தி துவங்கியது.

போர்ஷே 911ன் பிறப்பு

1964ம் ஆண்டு போர்ஷே 911 கார் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதைய பவர்ஃபுல் காராக களமிறங்கிய (130 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சினுடன் வந்தது) போர்ஷே 911 பெரும் வரவேற்பையும் பெற்றது.

இம்பாலா ஜுரம்

1965 களில் உலகம் முழுவதும் இம்பாலா ஜுரம் பற்றிக் கொண்டிருந்தது. 1958ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இம்பாலா கார் விற்பனையில் சக்கை போடு போட்டது. 1965ல் மட்டும் ஒரு மில்லியன் கார்கள் விற்பனையாகி சாதனை படைத்தது. தென் ஆப்ரிக்காவில் வாழும்  மான் இனத்தின் பெயரை தழுவி வந்ததுதான் இம்பாலா என்ற பெயர்.

இது ஃபெராரி ரகசியம்

நாள் ஒன்றுக்கு 14 கார்களை ஃபெராரி தயாரிக்கிறது.

முதல் ஆட்டோ இன்ஸ்யூரன்ஸ்

1897ம் ஆண்டிலேயே ஆட்டோ இன்ஸ்யூரன்ஸ் நடைமுறைக்கு வந்துவிட்டது. மாஸாசூட்ஸ் மாகாணத்தில் வெஸ்ட்பீல்டு பகுதியில்தான் முதல் ஆட்டோ இன்ஸ்யூரன்ஸ் விற்கப்பட்டது.

வைப்பர் வந்த கதை

வைண்ட்ஷீல்டுக்கான வைப்பர்களை மேரி ஆண்டர்சன் என்ற பெண் விஞ்ஞானி கண்டுபிடித்து முதன்முறையாக 1903ம் ஆண்டு அறிமுகம் செய்தார். 1916ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் கார்களில் வைப்பர்கள் ஸ்டாண்டர்டு உபகரணமாக இருப்பது கட்டாயமாக்கப்பட்டது.

முதல் 4 ஸ்ட்ரோக் எஞ்சின்

ஜெர்மனியை சேர்ந்த் ஓட்டோ என்பவர் டட்ச் பகுதியை சேர்ந்த லான்ஜென் என்னும் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் முதன்முதலில் 4 ஸ்ட்ரோக் எஞ்சினை கண்டறிந்தனர். 1863ம் ஆண்டு துவங்கிய ஆராய்ச்சியின் விளைவாக 1876ம் ஆண்டு இந்த புதிய எஞ்சின் உருவானது. அதன் பின்னர் ஜெர்மனியை சேர்ந்த பொறியாளர் கோட்டிலிப் டெயம்லர் இந்த எஞ்சின் தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு உகந்ததாக மேம்படுத்தினார். தற்போது வரை இந்த தொழில்நுட்பம்தான் பெரும்பாலான வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

முதல் தானுந்து

1769ல் முதல் காரை நிக்கோலஸ் கக்நாட் கண்டறிந்தார். இந்த கார் முதலில் பிரெஞ்ச் ராணுவத்தில் பீரங்கிகளை சுமந்து செல்ல பயன்படுத்தப்பட்டது. இந்த காரில் முன்பக்கம் நீராவி எஞ்சின் மற்றும் கொதிகலனும் பொருத்தப்பட்டிருந்தது. அதிகபட்சம் மணிக்கு 6 கிமீ வேகத்தில் இந்த கார் செல்லும்.

இது நம்ம ஊரு அதிசயம்

ஒரு லட்ச ரூபாய் கார் என்ற வாசகத்துடன் ஆட்டோமொபைல் துறையில் பெரும் சலசலப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நானோ இன்று வரை உலகின் மிகக் குறைந்த விலை கார் என்ற பெருமையை தக்க வைத்து வருகிறது.

See next photo feature article

நீங்களும் சொல்லலாம்?

கார்கள் அல்லது ஆட்டோமொபைல் துறையில் நிகழ்ந்த சம்பவங்கள் மற்றும் இதுபோன்று  உங்களுக்கு தெரிந்த சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி கருத்து பெட்டியில் எழுதுங்கள்.

Story first published: Friday, December 28, 2012, 15:49 [IST]
English summary
Cars have always hypnotized the car-slave. We are not gasconading that we are the ultimate Car Guru's in your vicinage, after all we know a bit or two about cars! Right there we wish to stop bragging and get to our latest discussion which is crazy car facts.
Please Wait while comments are loading...