இந்தியாவில் ஜி63 எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் பென்ஸ்

Posted by:

அடுத்த ஆண்டு புதிய ஜி-63 எஸ்யூவியை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ். உலகின் பல்வேறு நாடுகளில் பிரபல நட்சத்திரங்களால் கொண்டாடப்படும் இந்த புதிய மாடல் தற்போது இந்திய வாடிக்கையாளர்களின் கைகளுக்கும் விருந்து படைக்க வருகிறது.

கடந்த ஏப்ரலில் பீஜிங் மோட்டார் ஷோவில் இந்த புதிய ஜி கிளாஸ் முதன்முறையாக தரிசனம் தந்தது. ஜி-55 சொகுசு எஸ்யூவிக்கு மாற்றாக களமிறங்கியுள்ள இந்த காரை முன்கூட்டியே பதிவு செய்து வாங்கியுள்ளார் அமெரிக்க ரியாலிட்டி ஷோ நட்சத்திரம் கிம் கர்தஷியான். இந்தியா வரும் ஜி-63 எஸ்யூவி பற்றி கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்

சொகுசு எஸ்யூவியான ஜி-63 காரில் பகல் நேர ரன்னிங் விளக்குகள், பிரத்யேக டிசைன் கொண்ட அலாய் வீல்கள், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட சைலன்சர் என கண்ணை ஈர்க்கும் கவர்ச்சி அம்சங்கள் ஏராளம்.

உட்புறம்

சொகுசு காருக்கான அம்சங்கள் இல்லாமல் வெளியில் கரடு முரடாக இருந்தாலும் பலாப்பழம் போன்று உட்புறத்தில் அலங்கார வேலைப்பாடுகள் கவர்கின்றன. பென்ஸின் புதிய கமான்ட் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. லெதர் இருக்கைளும் அழகூட்டுகின்றன. மேலும், ஏராளமான வசதிகளையும், தாராள இடவசதியையும் கொண்டுள்ளது.

பவர்ஃபுல் எஞ்சின்

இந்த காரில் 544 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்ப்பட்டிருக்கிறது. ஏஎம்ஜி ஸ்பீடுஷிப்ட் ப்ளஸ் 7ஜி டிரோனிக் டிரான்மிஷன் சிஸ்டத்தை கொண்டது.

எப்போது வருகிறது?

அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இந்த புதிய சொகுசு எஸ்யூவியை பென்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. விற்பனை எண்ணிக்கைக்காக அல்ல, பிராண்டு பெயருக்காக..!!

விலை

இந்தியாவில் ஒரு கோடி ரூபாய் விலையில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Friday, December 28, 2012, 14:09 [IST]
English summary
The German manufacturer had first showcased the Mercedes G63 AMG at the Beijing Motor Show in April, 2012. The Mercedes G63 AMG has replaced the G55 in most international markets and by early next year the G63 AMG would raid India and replace the Mercedes G55.
Please Wait while comments are loading...

Latest Photos