2015ம் ஆண்டில் புதிய பொலிரோவை களமிறக்கும் மஹிந்திரா

Bolero
பொலிரோவின் வெற்றியை தக்க வைக்கும் விதத்தில் அடுத்த தலைமுறை மாற்றங்களுடன் புதிய பொலிரோவை வடிவமைத்து வருகிறது மஹிந்திரா. 2015ம் ஆண்டில் புதிய பொலிரோ விற்பனைக்கு வர இருக்கிறது.

மஹிந்திராவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் யு301 என்ற குறியீட்டு பெயரில் புதிய பொலிரோ உருவாகி வருகிறது. புதுப் பொலிவு பெற்றாலும் பழைய கம்பீரமான டிசைன் தத்துவத்தின் அடிப்படையிலே புதிய பொலிரோ வடிவமைக்கப்பட்டு வருகிறது.

உறுதிமிக்க, இலகு எடை கொண்ட புதிய சேஸிஸை புதிய பொலிரோவுக்கு மஹிந்திரா உருவாக்கி வருகிறது. தற்போதைய பொலிரோவில் டியூபுலர் ஃபிரேம் லேடர் சேஸிஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.ஆனால், புதிய பொலிரோ ஹைட்ரோபார்ம்டு லேடர் சேஸிஸ் கொண்டிருக்கும் என்பதால், தற்போதைய மாடலைவிட எடை குறைவாக இருக்கும். இதனால், பொலிரோவின் மைலேஜ் இன்னும் மேம்படும்.

தவிர, புதிய பொலிரோவில் புதிய எஞ்சினை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. எம்ஹாக் எஞ்சினை மேம்படுத்தி பொலிரோவில் பொருத்தப்படும் என தெரிகிறது.

நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் பொலிரோவை மிகவும் கவனமாக மஹிந்திரா மேம்படுத்தி வருவதாக அந்த நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #mahindra
English summary
Mahindra & Mahindra has yet again gone behind close doors. This time around they are working on the next generation Bolero [code name U301]. Mahindra is looking to come out with a fresh design. However the company will retain the original DNA of this mighty SUV.
Story first published: Thursday, October 4, 2012, 9:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X