நவீன வாய்ஸ் கன்ட்ரோல் வசதியுடன் புதிய ஸைலோ- சிறப்பு பார்வை

திங்கள்கிழமை, பிப்ரவரி 13, 2012, 10:01 [IST]
New Xylo dashboard
நவீன வாய்ஸ் கன்ட்ரோல் வசதி:

டோர் ஓபன், லைட் ஆன், வைப்பர் ஸ்டார்ட் என்று வாயால் கூறினால் போதும் புதிய ஸைலோவில் எல்லாமே தானாகவே நடக்கிறது. இதுபோன்ற தொழில்நுட்பம், இந்திய மார்க்கெட்டுக்கு புதிது. அத்தகைய நவீன வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டத்துடன் வந்துள்ள புதிய ஸைலோ அடுத்த தலைமுறைக்கான எம்பிவி கார் என்று கூறினால் தகும்.

டிரைவர் கட்டுப்பாட்டில் இயங்கும் புதிய வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம் வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறலாம். வாய்ஸ் கன்ட்ரோல் பட்டனை அழுத்தி விட்டு, 'டோர் ஓபன்' என்று கூறினால் கதவு தானாகவே திறந்து கொள்கிறது. 'டோர் க்ளோஸ்' என்றால் கதவுகள் அனைத்தும் டப் டப் என்று லாக் ஆகிவிடுகிறது.

இதேபோன்று, ஹெட்லைட்டுகள் ஆன் செய்வதற்கும், வைப்பரை இயக்குவதற்கும் என ஏராளமான வாய்ஸ் கன்ட்ரோல் வசதிகளை புதிய ஸைலோ கொண்டிருக்கிறது. தவிர, இ-9 டாப் வேரியண்ட்டில் 15 விதமான எச்சரிக்கை இண்டிகேட்டர் வசதிகளும் உண்டு.

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள்:

டியூவல் எஸ்ஆர்எஸ் ஏபிஎஸ் பிரேக்குகள், எக்ஸ்ட்ரா ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் ஆகியவையும் புதிய ஸைலோவில் இருப்பதால் பாதுகாப்பில் சமரசத்திற்கு இடமிருக்காது.
சர்ரவுண்ட் கூல் டியூவல் ஏசி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள், குரூஸ் கன்ட்ரோல், புளூ டிரைவ் சிஸ்டம் ஆகிய வசதிகளும் ஸைலோவின் பலத்தை கூட்டும் அம்சங்கள்.

2 டின் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் டிரைவ் அசிஸ்ட் சிஸ்டம், பயணிகளுக்கு தனித்தனி ஏசி வென்ட்டுகள், படுக்கையாக மாற்றிக்கொள்ளும் வசதியுடன் இருக்கைகள் ஆகியவை ஸைலோவை எங்கேயோ கொண்டு போய் விட்டது.

மைலேஜ்:


அராய் சான்றுகளின்படி, புதிய ஸைலோவின் டாப் வேரியண்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் எம் ஹாக் எஞ்சின் லிட்டருக்கு 14.02 கிமீ மைலேஜையும், எம் ஈகிள் எஞ்சின் லிட்டருக்கு 13 கிமீ மைலேஜையும், வர்த்தக பயன்பாடுகளுக்கான எம்டிஐ சிஆர்டிஐ எஞ்சின் லிட்டருக்கு 14.95 கிமீ மைலேஜையும் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸைலோவின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

ஸைலோ டி-2: ரூ.7.37 லட்சம்

ஸைலோ டி-4: ரூ.7.77 லட்சம்

ஸைலோ இ-4: ரூ.8.11 லட்சம்

ஸைலோ இ-4(ஏபிஎஸ்): ரூ.8.34 லட்சம்

ஸைலோ இபி (ஏபிஎஸ்): ரூ.9.10 லட்சம்

ஸைலோ இ-8 (ஏபிஎஸ், ஏர்பேக்): ரூ.9.47 லட்சம்

ஸைலோ இ-9:ரூ.10.25 லட்சம்

English summary
The new avatar of Mahindra's hugely successful xylo sports 50 new changes and features including five variants powered by 3 distinct engine options. Here are given the new xylo's specifications, features and review
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !