மேம்படுத்தப்பட்ட புதிய மஹிந்திரா ஸைலோ- சிறப்பு பார்வை

திங்கள்கிழமை, பிப்ரவரி 13, 2012, 10:05 [IST]
New Xylo
எங்கள் குடும்பம் கொஞ்சம் பெரிசு, இதற்கு தகுந்த கார் ஒன்று வேண்டும்; அடிக்கடி நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது, அலுப்பில்லாமல் செல்ல ஓர் விசாலமான கார் வேண்டும்; குறைந்த விலையில் ஓர் பிரிமியம் கார் வாங்குவதற்கு ஐடியா கொடுங்களேன்," என்று கேட்பவர்களுக்கு பளிச்சென்று புதிய ஸைலோவை கை காட்டி விடலாம். சரியான நேரத்தில், சரியான விலையில், செமத்தியான வசதிகளுடன் புதிய ஸைலோவை களமிறக்கியுள்ளது மஹிந்திரா.

கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸைலோவை சரியாக மூன்று ஆண்டுகளில் 50 விதமான புதிய மாற்றங்களை செய்து மஹிந்திரா தற்போது களமிறக்கியுள்ளது. மேலும், இதில் பெரிய ஆச்சரியமான மற்றும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பழைய மாடலைவிட புதிய மாடல் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை பொறி தட்ட வைத்துள்ளது மஹிந்திரா.

டைமன்ட் ஒயிட், பியரி பிளாக், டோரிடர் ரெட், ஜாவா பிரவுன், மிஸ்ட் சில்வர் மற்றும் ராக்கி பியேஜ் ஆகிய 6 அசத்தும் வண்ணங்களில் வந்துள்ள புதிய ஸைலோ, டி-2, டி-4, இ-4, இ-8 மற்றும் இ-9 ஆகிய 5 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

மேலும், 3 வித எஞ்சின் ஆப்சன்களில் வந்துள்ள புதிய ஸைலோவின் சிறப்பம்சங்கள் பார்வையை இங்கே காணலாம்.

எஞ்சின்:

பிரிமியம் ரேஞ்ச் மாடலை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இ-9 டாப் வேரியண்ட்டில் 120 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எம் ஹாக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. தனிநபர் பயன்பாட்டுக்கான மாடலில் 112 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எம் ஈகிள் எஞ்சினும், வர்த்தக பயன்பாடுகள் மற்றும் டிராவல்ஸ் ஆபரேட்டர்களுக்கு வசதியாக அதிக மைலேஜ் மற்றும் 95 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எம்டிஐ சிஆர்டிஇ எஞ்சின் உள்ளிட்ட மூன்று எஞ்சின் மாடல்களில் புதிய ஸைலோ வந்திருக்கிறது.

வெளிப்புற வடிவமைப்பு:

புதிய ஸைலோவின் வெளிப்புறம் முன்பைவிட படுகவர்ச்சியாக இருக்கிறது. புதிய கிரில், பெரிய ஏர்டேமுடன் கூடியமுகப்பை மஹிந்திராவின் சின்னம் பொருத்தப்பட்டிருப்பது படு வசீகரத்தை கொடுக்கிறது. தவிர, புதிய வடிவமைப்புடன் பேனட் மற்றும் ஹெட்லைட் ஸைலோவை படு ஸ்டைலாக மாற்றியுள்ளது.

புதிய ரூப் ரெயில் மற்றும் ரியர் ஸ்பாய்லர் ஆகியவை புதிய ஸைலோவுக்கு ஸ்போர்ட்டி லுக்கை கொடுக்கிறது. புதிய ஸ்டைலுடன் வீல் ஆர்ச்சுகள், கருப்பு நிறத்தில் பில்லர்கள் ஆகியவை சூப்பரப்பு சொல்ல வைக்கிறது.

உட்புற வடிவமைப்பு:

காருக்குள் அடியெடுத்து வைத்ததும் ஒரு விசாலமான அறையில் நுழைந்தது போன்ற உணர்வு. மேலும்,டாப் வேரியண்ட்டில் இத்தாலிய லெதரால் வேயப்பட்ட உட்புறம் காருக்குள் ஒரு ரம்மியமான பயண அனுபவத்தை கொடுக்கும் என்பதற்கு கியாரண்டி. ஆங்காங்கே மரவேலைப்பாடுகளும் மனதை கவர்கிறது. இடத்தை அடைத்துக்கொள்ளாமல் மூடி திறக்கும் வசதிகொண்ட ஸ்நாக்ஸ் டிரே, இரட்டை வண்ணத்தில் வரவேற்கும் டேஷ்போர்டு ஆகியவையும் புதிய ஸைலோவின் புதுபலம்.

(அடுத்த பக்கத்தில், கதவுகளை வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் திறக்கும் வசதி, பாதுகாப்பு,விலை விபரங்கள்)

English summary
The new avatar of Mahindra's hugely successful xylo sports 50 new changes and features including five variants powered by 3 distinct engine options. Here are given the new xylo's specifications, features and review
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !