மைலேஜ், விலை விபரங்களுடன் டிரைவ் ஸ்பார்க் தீர்ப்பு

புதன்கிழமை, பிப்ரவரி 15, 2012, 10:24 [IST]
Sunny Interior
மைலேஜ், விலை விபரம்:

அராய் சான்றின்படி டீசல் மாடல் ரேபிட் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜையும், சன்னி லிட்டருக்கு 21.6 கிமீ மைலேஜையும் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விஷயத்தில் ரேபி்ட்டைவிட சன்னி சிறிது சிக்கனமான கார் என்று கூறலாம்.

ஸ்கோடா ரேபிட் டீசல் கார் ரூ.7.95 லட்சம் முதல் ரூ.9.19 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. நிசான் சன்னி டீசல் மாடல் ரூ.7.98 லட்சம் முதல் ரூ.8.78 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு கார்களின் ஆரம்ப விலையிலும் பெரிய வித்தியாசம் இல்லை. விலை என்று ஒப்பிடும்போது, சன்னியில் கூடுதல் வசதிகள் மற்றும் அம்சங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை கருத்தில்க்கொள்வது அவசியம்.

எது பெஸ்ட்?


ஒரே செக்மென்ட் கார்கள் என்றாலும் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு தேர்வு அமையும். மேலும், இரண்டு கார்களுக்கும் விலை அடிப்படையில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்றும் கூறிவிட முடியாது.

அந்த வகையில், கையாளுமை மற்றும் ஒரு எலிகன்ட் லுக் கொண்ட கார்தான் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ரேபிட் பெஸ்ட் சாய்ஸ்.

அதிக மைலேஜ்,தாராள இடவசதியுடன், கூடுதல் வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு சன்னி பக்கம் கை நீட்டிவிடலாம்.

English summary
The Skoda Rapid diesel and Nissan Sunny diesel are unlikely competitors. But both are priced similarly and Drivespark is comparing these to entry level sedans. While the Rapid has the looks, power and performance, the Sunny takes the lead when it comes to space, comfort and handling. The sunny takes the cake with regards to its features while the Rapid impressed us with its stately looks. Read on to see the final results of this car comparison.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !