டஸ்ட்டருக்கு கூடுதலாக 2 இருக்கைகள்: இனி 7 பேர் செல்லலாம்

Posted by:

டஸ்ட்டரில் கடைசி வரிசையில் இரண்டு கூடுதல் இருக்கைகளை பொருத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரினால்ட் டீலர்களில் கூடுதல் ஆக்சஸெரீயாக இந்த இருக்கைகளை வாங்கிக் பொருத்திக் கொள்ளலாம்.

கடந்த 4ந் தேதி நம் நாட்டு மார்க்கெட்டில் முதல் காம்பெக்ட் எஸ்யூவியான டஸ்ட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. 5 பேர் செல்லும் வசதிகொண்டதாக இந்த எஸ்யூவி வந்தது.

இந்தநிலையில், டாடா சஃபாரி உள்ளிட்ட கார்களில் இருப்பது போன்று கடைசி வரிசையில் இருக்கைகள் பொருத்தினால் கூடுதலாக 2 பேர் பயணம் செய்ய முடியும் என்ற கருத்து எழுந்தது.

இதையடுத்து, டஸ்ட்டருக்கு பின் வரிசையில் ஜம்ப் இருக்கைகள் எனப்படும் மடக்கி விரிக்கும் வசதிகொண்ட 2 இருக்கைகளை பொருத்திக் கொள்ளும் வசதியை ரினால்ட் வழங்குகிறது. ஆனால், இந்த இருக்கையில் பெரியவர்கள் வசதியாக உட்கார்ந்து பயணம் செய்ய முடியாது.ஆனால், சிறியவர்கள் அமர்ந்து செல்லலாம்.

கூடுதல் இருக்கைகள் பொருத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் இதனை டீலர்களில் கூடுதல் ஆக்சஸெரீயாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் இருக்கைகள் பொருத்தினால் டஸ்ட்டரில் 7 பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும். மேலும், டஸ்ட்டரின் விற்பனை அதிகரிக்க இதுவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.

Story first published: Friday, July 13, 2012, 10:04 [IST]
English summary
Renault Duster has finally got 2 extra Seats. The extra seats are available as a dealer accessory and could be installed additionally.
Please Wait while comments are loading...

Latest Photos