ஜப்பானில் சுஸுகியின் புதிய விட்டாரா அறிமுகம்: விரைவில் இந்தியா வருகிறது

வடிவமைப்பில் மாற்றங்களுடன் புதிய விட்டாரா எஸ்யூவியை ஜப்பான் மார்க்கெட்டில் சுஸுகி அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விட்டாரா இந்த ஆண்டு இறுதியில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிமியம் எஸ்யூவியான விட்டாராவை சக போட்டியாளர்களுடன் மோதுவதற்கு சம பலத்துடன் மாற்றியுள்ளது சுஸுகி. 5 கண்ணை கவரும் வகையில் முன்பக்க கிரில் மாற்றியுள்ளது விட்டாராவின் கம்பீரத்தை தூக்கி காட்டுகிறது. ஹெட்லைட்டுகள் விட்டாராவை அழகிய அசுரனாக காட்டுகிறது.

New Grand Vitara

விட்டாராவின் வெளிப்புறத்தில் பல மாற்றங்கள் கண்டிருந்தாலும் உட்புறத்தில் பெரிய அளவில் எந்த மாற்றம் இல்லை. பேப்ரிக் இருக்கைகள், லெதர் ஹேண்டில்கள் என சில மாற்றங்கள் தென்படுகிறது. இதனால், முன்பைவிட கொஞ்சம் சொகுசாக இருக்கும் விட்டாரா.

வி்ட்டாராவில் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 165 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டிருக்கிறது. 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது புதிய விட்டாரா. இதில், ஆல் வீல் டிரைவ் ஆப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட விட்டாரா ரூ.17 லட்சத்திலும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல் ரூ.18.3 லட்சத்திலும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் குறைந்த விலை பிரிமியம் எஸ்யூவி மாடல்களில் இதுவும் ஒன்று.

புதிய விட்டாராவும் பிற மாடல்களுக்கு சவால் கொடுக்கும் விலையில் வரலாம் என்று கருதப்படுகிறது. எனவே, நம் நாட்டு மார்க்கெட்டில் புதிய விட்டாரா நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The Suzuki Grand Vitara has got an update in the form of the new Escudo (The Japanese name for the 2013 Grand Vitara). Suzuki has launched the latest version of the SUV in Japan today. The new 2013 Suzuki Grand Vitara is expected to make its way to India this year itself.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X