ரூ.1.46 கோடி விலையில் புதிய ஜி63 சொகுசு எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 2012ம் ஆண்டு பீஜிங் மோட்டார் ஷோவில் முதன்முறையாக இந்த புதிய ஜி கிளாஸ் எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு மார்க்கெட்டுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு வரும் ஜி 63 எஸ்யூவி தற்போது இந்தியாவிலும் அடியெடுத்து வைத்துள்ளது.
கிம் கர்தஷியான் உள்ளிட்ட உலக அளவில் பிரபலங்களால் கொண்டாடப்படும் இந்த எஸ்யூவி நிச்சயம் இந்திய பிரபலங்களையும், தொழிலதிபர்களையும் கவரும் என பென்ஸ் தெரிவித்துள்ளது. ஜி55 எஸ்யூவிக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய எஸ்யூவியின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.




















































