ஜப்பானில் 2014 ஹோண்டா ஜாஸ் இன்று அறிமுகம்: புதிய படங்கள்

தனது தாயகமான ஜப்பானில் இன்று புதிய ஜாஸ் காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹோண்டா கார்ஸ். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் வர இருக்கும் இந்த புதிய ஜாஸ் புத்தம் புதிய பிளாட்ஃபார்மில், புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அதிக எரிபொருள் சிக்கனம் மாடலாக இருக்கும் என்பதோடு, இந்தியாவில் டீசல் மாடலிலும் விற்பனைக்கு வர இருப்பதால், பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. ஜப்பான் டீலருக்கு வந்திருக்கும் ஜாஸ் கார்களின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

 டிசைன்

டிசைன்

புத்தம் புதிய பிளாட்ஃபார்மில் மிக லட்சணமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய ஜாஸ் பழைய மாடலைவிட 60 மிமீ கூடுதல் நீளம் கொண்டது. புதிய ஜாஸ் டிசைன் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மிக கவர்ச்சியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. முகப்பு முற்றிலும் மாற்றப்பட்டு கவர்ச்சி ததும்புகிறது. பின்புற டெயில்லைட்டுகள் சிஆர்வி எஸ்யூவியை பிரதிபலிக்கிறது. மொத்தத்தில் பழைய காரை நினைவூட்டாமல் புத்தம் புதிதாக இருக்கிறது.

இடவசதி

இடவசதி

சின்ன எம்பிவி கார் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த கார் பிற மாடல்களைவிட நீளம் கூட்டப்பட்டிருப்பதால், ஹெட்ரூம், லெக்ரூம் என அனைத்திலும் சிறப்பான இடவசதி கொண்ட காராக இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

ஜப்பானில் 3 எஞ்சின் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 98 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் மாடல், 1.5 லிட்டர் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடல், 133 பிஎச்பி ஆற்ளை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் கியர் பாக்ஸ் கொண்ட ஹைபிரிட் மாடல் என மூன்று வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 இந்தியாவுக்கு டீசல் மாடல்

இந்தியாவுக்கு டீசல் மாடல்

இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் ஐடிடெக் டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது.

பூட் ரூம்

பூட் ரூம்

புதிய ஜாஸ் நீளம் அதிகரிப்பதோடு, பூட் ரூம் கொள்ளளவும் 400 லிட்டராக கூட்டப்பட்டுள்ளது.

உற்பத்தி

உற்பத்தி

இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய ஜாஸ் கார் ராஜஸ்தானில் இருக்கும் தபுகெரா ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

பிரியோ, அமேஸ் காருக்கு இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. டிசையரை மையமாக வைத்து அமேஸுக்கு விலை நிர்ணயித்தது போன்று, ஸ்விப்ட் காரை அடிப்படையாகக் கொண்டு புதிய ஜாஸ் விலை நிர்ணயிக்கப்படும்.

தாய்லாந்து பார்ட்ஸ்

தாய்லாந்து பார்ட்ஸ்

இந்த காருக்கு தாய்லாந்தில் இருந்து உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன

 நம்பிக்கை

நம்பிக்கை

முந்தைய ஜாஸ் விற்பனையில் சோபிக்காமல் போனதால் இந்தியாவில் சமீபத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தநிலையில், புத்தம் புதிய டிசைன், டீசல் எஞ்சின், சரியான விலை உள்ளிட்டவை மூலம் புதிய ஜாஸ் கார் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று ஹோண்டா நம்பிக்கை வைத்திருக்கிறது.

இந்திய பிரவேசம்

இந்திய பிரவேசம்

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜாஸ் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படங்கள் உதவி: NewJazzThailand

Most Read Articles
English summary
Japanese automaker, Honda Motors has announced that the new 2014 Jazz will be launched in Japan today. Prior to the launch, it can be seen in the new images here that the car has already arrived at Honda dealerships in Japan.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X