அடுத்த ஆண்டு இந்தியா வரும் புதிய ஹோண்டா ஜாஸ் இதுதான்!

அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஹோண்டா ஜாஸ் காரின் படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இந்தியாவில் சமீபத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்ட ஜாஸ் காருக்கும் புதிய ஜாஸ் காருக்கும் தோற்றத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அமேஸ் காருக்கு அடுத்ததாக இந்தியாவில் டீசல் எஞ்சினுடன் ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கும் அடுத்த புதிய காராக இதனை ஆட்டோமொபைல் துறையினர் குறிப்பிடுகின்றனர். எனவே, இதன் மீதான எதிர்பார்ப்பு எழுவது இயற்கையே.

முகப்பு

முகப்பு

முகப்பில் சிட்டி, சிவிக் கார்களின் ஹெட்லைட் மற்றும் கிரில்களின் சாயல் தெரிகிறது. ஆனால், இந்திய வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப சின்னஞ்சிறிய மாற்றங்கள் செய்யப்படலாம்.

பின்புறம்

பின்புறம்

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியை போன்று டெயில் லைட் அசெம்பிள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பழைய மாடலுக்கும், இதற்குமான வித்தியாசம் அதிகம் தெரிகிறது.

அதிக இடவசதி

அதிக இடவசதி

பழைய ஜாஸ் காரைவிட அதிக இடவசதி கொண்டதாக இந்த புதிய கார் இருக்கும். ஹெட்ரூம், லெக்ரூம் ஆகியவை மிக தாராளமாகவே இருக்கும்.

 டீசல் மாடல்

டீசல் மாடல்

அமேஸ் காரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் ஐடிடெக் டீசல் எஞ்சினையும், பழைய ஜாஸ் காரில் பயன்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை சிறியம மாற்றங்களை செய்து மேம்படுத்தி பொருத்தவும் ஹோண்டா முடிவு செய்துள்ளது.

புதிய ஆலையில் உற்பத்தி

புதிய ஆலையில் உற்பத்தி

கிரேட்டர் நொய்டாவிலுள்ள பழைய ஆலையில் ஜாஸ் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், புதிய ஜாஸ் கார் ராஜஸ்தான் மாநிலம், தபுகெராவில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

தாய்லாந்து பாகங்கள்

தாய்லாந்து பாகங்கள்

புதிய ஜாஸ் காருக்கான பாகங்கள் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன.

விலை

விலை

பிரியோ காருக்கும், அமேஸ் செடான் காருக்கும் இடையில் இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை நிலைநிறுத்த ஹோண்டா முடிவு செய்துள்ளது. மேலும், பழைய ஜாஸ் கார் அதிக விலை கொண்டதாக பெயரெடுத்து விற்பனையில் பின்தங்கியது. எனவே, மார்க்கெட்டில் இருக்கும் பிற பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு சவாலை கொடுக்கும் விலையில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. அதேவேளை, ஹோண்டா அமேஸ் காரைவிட புதிய ஜாஸ் காரின் சில வேரியண்ட்கள் விலையில் சிறிது கூடுதலாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X