2015 ஃபோர்டு மஸ்டாங் அறிமுகம் - அதிகாரப்பூர்வ தகவல்கள்

By Saravana

சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்லும் புதிய போர்டு மஸ்டாங் காரின் படங்கள் மற்றும் தகவல்களை ஃபோர்டு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

கடந்த 1964ம் ஆண்டு ஏப்ரல் 14ந் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் தற்போது 6ம் தலைமுறை மாடலாக வந்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ந் தேதி மஸ்டாங்கின் 50ம் ஆண்டு பொன்விழாவில் இந்த புதிய தலைமுறை மஸ்டாங் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய ஃபோர்டு மஸ்டாங் அமெரிக்காவை தவிர்த்து, ஐரோப்பிய, ஆசிய கண்டங்களிலும் விற்பனைக்கு செல்கிறது. இந்த புதிய மஸ்டாங் மசில் கார் இந்தியாவிலும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த காரின் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

மூன்று வித எஞ்சினுடன் கிடைக்கும். 3.7 லிட்டர் வி6 எஞ்சின், 5.0 லிட்டர்வி8 எஞ்சின் மற்றும் 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். இதில், 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தை தருவதாக இருக்கும்.

5.0 லிட்டர் வி8 ஜிடி

5.0 லிட்டர் வி8 ஜிடி

டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த மஸ்டாங் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் 420 எச்பி ஆற்றலையும் 528 என்எம் டார்க்கையும் அளிக்கும். அதிக எரிபொருள் சிக்கனம், குறைந்த கார்பன் புகையை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளது.

2.3 ஈக்கோபூஸ்ட் எஞ்சின்

2.3 ஈக்கோபூஸ்ட் எஞ்சின்

2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பொருத்தப்பட்ட எஞ்சின் 305 எச்பி ஆற்றலையும், 406 என்எம் டார்க்கையும் வழங்கும். மஸ்டாங் மாடல்களில் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாக இது இருக்கும்.

 பேஸ் மாடல்

பேஸ் மாடல்

3.7 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்ட மஸ்டாங் கார் பேஸ் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மாடல் 300 எச்பி பவரையும், 366 என்எம் டார்க்கையும் அளிக்கும். அனைத்து மாடல்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.

 கன்வெர்ட்டிபிள்

கன்வெர்ட்டிபிள்

கன்வெர்ட்டிபிள் மாடலின் புதிய கூரையின் மூலம் கேபின் நாய்ஸ் குறைவாக இருக்கும் என்பதோடு, தோற்றமும் மிகச் சிறப்பாக இருக்கும் என்கிறது ஃபோர்டு. மேலும், மிக விரைவாக கூரையை மடக்கி விரிக்கவும் முடியும்.

 புதிய சஸ்பென்ஷன்

புதிய சஸ்பென்ஷன்

முதல்முறையாக இந்த காரின் பின்புறத்தில் இன்டிபென்டன்ட் சஸ்பென்ஷன் அமைப்பு பொருத்தப்ப்டடுள்ளது. இதனால், மிகச்சிறப்பான கையாளுமை கொண்டதாக இருக்கும்.

பொன்விழா சின்னம்

பொன்விழா சின்னம்

மஸ்டாங் காரின் பொன்விழாவையொட்டி, ஒவ்வொரு 2015 மாடல் மஸ்டாங் காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரிலும் குதிரை சின்னமும், Mustang - Since 1964 என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

Most Read Articles
English summary
It's official. The 2015 Ford Mustang has been officially revealed in all its glory, for the first time in its almost 50 year long history, all across the globe. Ford revealed its flagship muscle car in six cities across four continents.
Story first published: Friday, December 6, 2013, 11:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X