கார்களுக்கான மியூசிக் சிஸ்டம்: மாடல்கள், விலை பற்றிய விபரங்கள்

கார் பயணத்தை இனிதாக்குவதில் மியூசிக் சிஸ்டத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், விலையை குறைப்பதற்காக பல கார் நிறுவனங்கள் சிறிய கார்களின் பேஸ் வேரியண்ட்டில் மியூசிஸ் சிஸ்டத்தை ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக வழங்குவதில்லை.

ஆனாலும், மியூசிக் சிஸ்டம் இல்லாத கார் பயணத்தை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. நம் கைக்கு எட்டும் விலையில் ஏராளமான மியூசிஸ் சிஸ்டம்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. மேலும், சாதாரண மியூசி்க் சிஸ்டம் இருந்தால் கூட அதனுடன் சப் ஊஃபர் உள்ளிட்டவற்றை வாங்கி இணைத்தும் மியூசிக் சிஸ்டத்தை மேம்படு்ததலாம்.

ஆரம்ப விலை

ஆரம்ப விலை

ரூ.6,000 விலை முதல் சிறந்த பேஸ் மாடல் மியூசிக் சிஸ்டம் சந்தையில் கிடைக்கின்றன. ஹெட்யூனிட் மற்றும் இரண்டு சாதாரண அளவு கொண்ட ஸ்பீக்கர்களும் கிடைக்கும்.

2 டின் மியூசிக் சிஸ்டம்

2 டின் மியூசிக் சிஸ்டம்

18 செமீ நீளமும், 5 செமீ உயரமும் கொண்ட ஸ்லிம் மியூசிக் சிஸ்டம் சிங்கிள் டின் மியூசிக் சிஸ்டம் என்கிறோம். 18 செமீ நீளமும், 10 செமீ உயரமும் கொண்டவை டபுள் டின் மியூசிக் சிஸ்டம் எனப்படுகிறது. கார் சென்ட்ரல் கன்சோலில் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு தகுந்தவாறு தேர்வு செய்து வாங்க வேண்டும்.

வசதிகள்

வசதிகள்

சிடி, எம்பி3 டிரைவ், யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் போர்ட், எப்எம் ரேடியோ கன்ட்ரோல் பட்டன்கள், வால்யூம் கன்ட்ரோல் மற்றும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கும் வசதியுடன் இவை கிடைக்கின்றன.

 பேஸிக் மாடல்கள்

பேஸிக் மாடல்கள்

பயனீர் டிஇஎச்2390யுபி, சோனி சிடிஎக்ஸ்-ஜிடி303எம்பி, கென்வுட் கேடிசி 139எஸ் ஆகிய மாடல்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. சோனி எக்ஸ்எஸ்-ஜிடிஎப் 10272 மற்றும் கென்வுட் கேஎப்சி-எஸ் 502பி ஆகிய ஸ்பீக்கர்கள் ரூ.1,400 விலையில் கிடைக்கின்றன. மொத்தத்த்தில் இரண்டும் ரூ.7,000 என்ற விலையில் வாங்கி விடலாம்.

டாப் மாடல் வசதிகள்

டாப் மாடல் வசதிகள்

வெறும் மியூசிக் சிஸ்டமாக இல்லாமல் துல்லியமாக இனிய இசையை வழங்குவதற்காக கூடுதல் சப் ஊஃபர்கள், கிராஸ்ஓவர் மற்றும் ஆம்பிளிஃபயர் ஆகியவற்றை வாங்கி பொருத்தலாம். இத்தோடு எல்சிடி டச் ஸ்கிரீன் ஆகியவற்றுடன் தற்போது மியூசிக் சிஸ்டம் கிடைக்கின்றன. ஸ்மார்ட்போன் மற்றும் ஐபாட் ஆகியவற்றுடன் இணைத்துக் கொள்ளும் வசதி, புளூடூத் என ஏராளமான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் ரூ.9,000 விலை முதல் கிடைக்கின்றன.

 டாப் மாடல்கள்

டாப் மாடல்கள்

பயனீர் ஏவிஎச் 2390டிவிடி, அல்பைன் ஐவிஏ-டபிள்யூ520இ, ஜேவிசி கேடபிள்யூ-எக்ஸ்ஆர் 416டி ஆகியவை ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கின்றன. இதுதவிர, சப் ஊஃபர்கள், ட்விட்டர், ஆம்பிளிபயர், கிராஸ்ஓவர் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த மியூசிக் சிஸ்டத்தை வாங்குவதற்கு ரூ.20,000 விலையி்ல் வாங்கி பொருத்தி விடலாம்.

 டிவி திரை

டிவி திரை

சுற்றுலா மற்றும் நீண்ட தூர பயணங்கள் செல்லும்போது டிவி பார்த்துக் கொண்டே சென்றால் பயணம் போரடிக்காமல் அலுப்பில்லாமல் செல்ல முடியும். இதற்காக, தற்போது மானிட்டரை தனியாக வாங்கி பொருத்திக்கொள்ளலாம். சோனி எக்ஸ்விஎம்-பி62, கென்வுட் எல்இசட்-702 டபிள்யூ, அல்பைன் பிகேஜி-ஆர்எஸ்இ2 ஆகியவை ரூ.8,000 விலையில் கிடைக்கின்றன. இதைவிட மலிவான விலையில் ஏராளமான நிறுவனங்கள் கார் மானிட்டர்களை விற்பனை செய்கின்றன. ஆனால், அவற்றிற்கு உத்தரவாதம் ஏதும் இருக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Most Read Articles
English summary
If you’ve got a car that does not have a music system or you want to upgrade the basic music system that comes with the car, here are a few pointers on audio systems and the budget you’ll have to set aside for a good music system.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X