ஆம் ஆத்மி கேஜ்ரிவாலின் ஆஸ்தான வாகனம்!!

அரசாங்கம் சார்பில் தரப்படும் வீடு, கார், பாதுகாப்பு சலுகைகளை வேண்டாம் என்று அதிரடியாக மறுத்துள்ளார் டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள அர்விந்த் கேஜ்ரிவால்.

அரசியல்வாதி என்றாலே அட்லீஸ்ட் ஒரு எஸ்யூவியாவது இருக்க வேண்டியது அடிப்படை தகுதியாக உள்ளது. ஆனால், எளிமை, உண்மை என்று குரலெழுப்பி மக்களை தன்பால் கவர்ந்துள்ள அர்விந்த் கேஜ்ரிவாலிடம் இருப்பது பழைய மாருதி வேகன் ஆர். அவர் நீல நிற வேகன் ஆர் கார் ஒன்றைத்தான் பயன்படுத்தி வருகிறார்.

உற்றத் தோழன்

உற்றத் தோழன்

தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்வதற்கும், கட்சிப் பணிகளுக்கும் அந்த பழைய வேகன் ஆர் காரைத்தான் பயன்படுத்தினார். ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க கோருவதற்காக வந்தபோதும் அவர் அந்த காரில்தான் வந்தார்.

நடுத்தர வர்க்கத்தின் கனவு கார்

நடுத்தர வர்க்கத்தின் கனவு கார்

நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற காராக மக்களுக்கான கார் தயாரிப்பாளர் என்ற முத்திரையை பெற்ற மாருதி விற்பனை செய்து வரும் கார் மாடல்தான் வேகன் ஆர். ரூ.5 லட்சத்திற்குள் டாப் வேரியண்ட்டை வாங்கி விட முடியும்.

எஞ்சின்

எஞ்சின்

67 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜ் தரும் என மாருதி தெரிவிக்கிறது.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

அரசியல்வாதி என்றால் முன்னாலும், பின்னாலும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்பது சகஜம். ஆனால், அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு முன், பின் இதுவரை எந்த வாகனமும் அணி வகுக்காதது, அவருக்கு வாக்களித்த மக்களுக்கு ஆறுதல். இதே நிலை எதிர்காலத்தில் தொடர்ந்தால் நல்லது.

கடவுள் நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை

டெல்லியில் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து அதிகம். இந்த நிலையில், டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும் கேஜ்ரிவால் புல்லட் புரூஃப் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரில் வலம் வரப்போகிறார். கடவுள்தான் துணை என்று கூறியிருக்கும் கேஜ்ரிவால்தான் நவீன இந்தியாவில் புல்லட் ப்ரூப் வசதி இல்லாத காரில் செல்லும் முதல் முதல்வராக கூறலாம்.

முழுசா தெரியுணுமா?

முழுசா தெரியுணுமா?

கேஜ்ரிவால் வைத்திருக்கும் வேகன் ஆர் காரில் என்னென்ன இருக்கும். அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X