அடுத்த மாதம் அறிமுகமாகிறது லேலண்டின் தோஸ்ட் பயணிகள் வேன்

Written By:

அடுத்த மாதம் தோஸ்ட் மினி டிரக்கின் பயணிகள் வாகன மாடலை அறிமுகப்படுத்த அசோக் லேலண்ட் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானிய நிறுவனமான நிசான் கூட்டணியில் அசோக் லேலண்ட் இணைந்து தயாரித்து விற்பனை செய்து வரும் தோஸ்ட் மினி டிரக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

 

அடுத்ததாக தோஸ்ட் அடிப்படையிலான பயணிகள் வாகனத்தையும் நிசான் - லேலண்ட் கூட்டணி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பயணிகள் வேனுக்கு தோஸ்ட் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

டாடா விங்கர், டெம்போ டிராவலர் உள்ளிட்ட வேன்களுக்கு போட்டியாக வர்த்தக வாகன மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய பயணிகள் வேன் தோஸ்ட் மினி டிரக் போன்றே பெரிய வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

இந்த பயணிகள் வேன் 14 பேர் பயணம் செய்யும் இருக்கை வசதியுடன் வரும் என்று தெரிகிறது. இதுதவிர, சிஎன்ஜியில் இயங்கும் தோஸ்ட் மினி டிரக்கையும் அசோக் லேலண்ட் அறிமுகம் செய்ய உள்ளது.

இதனிடையே, தோஸ்ட் எக்ஸ்பிரஸ் டிரக் அறிமுகத்துக்கு முன்னதாக நிசான் எவாலியாவின் ரீபேட்ஜ் மாடலான ஸ்டைல் எம்பிவி காரை முன்னதாக விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது அசோக் லேலண்ட். வர்த்தக மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட இருக்கும் இந்த புதிய எம்பிவி கார் தற்போது டீலர் யார்டுகளை அடைந்துவிட்டது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Ashiok leyland to launch Dost express passenger van by next month, says reports.
Please Wait while comments are loading...

Latest Photos