ஆகஸ்ட்டில் ஆடி கார் விற்பனை 21 சதவீதம் உயர்வு

By Saravana

பொருளாதார மந்த நிலையின் தாக்கம் இருந்தபோதும், கடந்த மாதம் ஆடி நிறுவனத்தின் கார் விற்பனை 21 சதவீதம் அதிகரித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 726 கார்களை விற்றிருந்த ஆடி கடந்த மாதம் 875 கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோன்று, நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் கார் விற்பனை 18.86 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் கூறியிருக்கிறது.

Audi Q3

கடந்த ஆண்டு ஜனவரி- ஆகஸ்ட் இடையிலான காலக்கட்டத்தில் 5,406 கார்களை ஆடி விற்பனை செய்திருந்தது. நடப்பு ஆண்டின் இதே காலக்கட்டத்தில் அந்த நிறுவனம் 6,246 கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆடி இந்தியா தலைவர் ஜோ கிங் கூறுகையில்," பொருளாதார சுணக்க நிலையிலும் எங்களது சிறந்த தயாரிப்புகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் மூலம் இலக்கை எளிதாக அடைய முடியும் என்று நம்புகிறோம்.

முதல் 8 மாதங்களில் பல்வேறு தடைகளை கடந்து சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளோம். இதனை தக்க வைத்துக் கொள்வோம் என்று நம்பிக்கை உள்ளது," என்று கூறினார்.

Most Read Articles
English summary
Audi India has registered 21 percent growth in sales in August 2013. Audi India has sold 6426 vehicles in January-August 2013 period, compared to 5406 cars in same period last year.
Story first published: Sunday, September 8, 2013, 10:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X