வரும் 19ல் ஆடியின் குறைந்த விலை மாடல் அறிமுகமாகிறது!

Audi Q3 S
வரும் 19ந் தேதி க்யூ3 எஸ்யூவியின் குறைந்த விலை கொண்ட க்யூ3 எஸ் பேஸ் மாடலை ஆடி விற்பனைக்கு கொண்டு வருகிறது.

பென்ஸ் ஏ கிளாஸ், பி கிளாஸ் மற்றும் விரைவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார்கள் சொகுசு கார் மார்க்கெட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த கார்கள் ரூ.27 லட்சம் ஆன்ரோடு விலைக்குள் கைக்கு கிடைத்து விடுகின்றன. ஆனால், ஆடியிடம் இந்த விலை ரகத்தில் கார் மாடல் இல்லை.

ஆடியின் அதிகம் விற்பனையாகும் க்யூ3 எஸ்யூவியின் ஆன்ரோடு விலை ரூ.35 லட்சத்தை நெருங்குகிறது. இதனால், பிற நிறுவனங்களுடன் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை தவிர்த்துக் கொள்ளும் விதமாக வசதிகளை குறைத்து க்யூ3 எஸ் என்ற பெயரில் க்யூ3 எஸ்யூவியின் பேஸ் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த கார் அவுரங்காபத்தில் உள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளதால் இறக்குமதி வரியிலிருந்து தப்பிக்கும்.

இதன்மூலம், ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. இது விலையில் பென்ஸ் ஏ கிளாஸ், பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார்களுடன் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

க்யூ3 எஸ் காரில் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். தற்போது விற்பனையில் இருக்கும் க்யூ3 மாடல் 170 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

ஆனால், க்யூ3 ஸ்போர்ட் என்ற பெயரில் வரும் மாடல் குறைந்த திறன் கொண்டதாக இருக்கும். இந்த மாடலின் எஞ்சின் 140 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

Most Read Articles
English summary
If you think Audi does not have a new vehicle to take on the Mercedes A Class, B Class, and the upcoming BMW 1 Series, then you would be wrong. Enter, Audi Q3 Sport. Technically, just a variant of the Q3 crossover, the Audi Q3 Sport is a made for India model. The three way ‘budget' luxury car battle between the Germans, in India, is about to begin.
Story first published: Thursday, August 8, 2013, 15:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X