டிசைன் வல்லமையை காட்டுவதற்காக ஆடி வெளியிட்ட புதிய கான்செப்ட்!

By Saravana

தனது டிசைன் வல்லமையை உலகுக்கு பரைசாற்றும் விதத்தில் புதிய கிராஸ்ஓவர் ரக கான்செப்ட் காரின் ஸ்கெட்சுகளை ஆடி வெளியிட்டுள்ளது.

இந்த புதிய கார் ஜனவரியில் நடைபெறும் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட குறைவான விலை க்யூ1 கான்செப்ட் எஸ்யூவியும் இதுவும் வேறு வேறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகம்

ரகம்

அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் கூடிய இந்த கார் ஆடியின் புதிய டிசைன் தாத்பரியத்தை கொண்டது. ஓடுதளம் மற்றும் சாதாரண சாலை என இரண்டிற்கும் ஏற்ற மாடலாக இது டிசைன் செய்யப்பட்டுள்ளது.

வடிவம்

வடிவம்

இந்த கார் 4.2 மீட்டர் நீளம் கொண்டது. 19 அங்குல சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அடுத்த தலைமுறை க்யூ7 எஸ்யூவி இந்த கான்செப்ட் காரின் அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.

 ஆஃப்ரோடு தகவமைப்பு

ஆஃப்ரோடு தகவமைப்பு

முன்புறம் மற்றும் பின்புறத்தில் அலுமினியத்திலான உறுதிமிக்க கார்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இது ஆஃப்ரோடு மற்றும் கரடு முரடான சாலைகளில் செல்லும்போது காரின் கீழ்பாகங்களுக்கு பாதுகாப்பு தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசைன்

டிசைன்

புதிய முகப்பு கிரில், டியூவல் ஹெட்லைட்டுகள் உள்ளிட்டவை முகப்பை மிக கம்பீரமாக காட்டுகின்றன. இது உற்பத்தி நிலைக்கு செல்லாவிட்டாலும், இதன் டிசைன் தாத்பரியங்கள் எதிர்கால எஸ்யூவி மாடல்களில் ஆடி பயன்படுத்திக் கொள்ளும்.

Most Read Articles
மேலும்... #audi #four wheeler #ஆடி
English summary
Audi has released sketches of the "Show Car" for the North American International Auto Show (NAIAS) in Detroit that will be held in January 2014. Audi has not named the concept yet, but only says it will be a crossover.
Story first published: Friday, December 6, 2013, 14:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X