இந்தியாவில் ஆடி க்யூ3 உற்பத்தி துவங்கியது: காத்திருப்பு காலம் குறையும்

இந்தியாவில் ஆடி க்யூ3 எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், க்யூ3 காருக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்திலுள்ள ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஸ்கோடா கார் ஆலையின் புதிய உற்பத்தி பிரிவில் க்யூ3 அசெம்பிளிங் துவங்கப்பட்டுள்ளது. இதே ஆலையில்தான் க்யூ7 காரும் அசெம்பிள் செய்யப்படுகிறது.

Audi Q3 SUV

ஏ4, ஏ6, க்யூ5 மற்றும் க்யூ7 கார்களை தொடர்ந்து ஆடியின் 5வது கார் மாடலாக க்யூ3 எஸ்யூவியும் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

மேலும், இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஆடியின் அனைத்து எஸ்யூவி மாடல்களும் தற்போது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஆடியின் விற்பனயைில் க்யூ3 எஸ்யூவி முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. இதுவரை இறக்குமதி செய்யப்பட்டு டெலிவிரி கொடுக்கப்பட்டு வந்ததால், கால தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், இங்கேயே அசெம்பிளிங் துவங்கியிருப்பதால் விரைவாக டெலிவிரி கொடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்களை எளிதாக தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு ஆடிக்கு கிட்டியுள்ளது.

Most Read Articles
English summary
Audi has started production of the Q3 compactclass SUV at its Aurangabad plant, in the Indian state of Maharashtra. After the Audi A4, Audi A6, Audi Q5 and Audi Q7, the Audi Q3 is the fifth model to be produced in India by the Ingolstadt carmaker.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X