ஏ கிளாஸுக்கு பலமான வரவேற்பு: இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய திட்டம்

By Saravana
Benz A Class
ஏ கிளாஸ், பி கிளாஸ் கார்களுக்கு பலமான வரவேற்பு கிடைத்துள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பெட்ரோல் பி கிளாஸ் காரின் விற்பனை 500ஐ தாண்டியிருக்கிறது.

இந்த காரின் டீசல் மாடல் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோன்று, ஏ கிளாஸ் காருக்கு வெறும் 10 நாட்களில் 400 பேர் முன்பதிவு செய்துள்ளதாக பென்ஸ் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இரண்டு கார்களுக்குமான வரவேற்பு நன்றாக இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

ஏ கிளாஸ் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்பு இந்திய வாடிக்கையாளர்கள் காம்பெக்ட் மாடல்களை ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் எங்களிடம் இருந்தது.

ஆனால், தற்போது எங்களிடம் விற்பனையாகும் 4ல் ஒரு கார் காம்பெக்ட் மாடலாக இருக்கிறது என்று பென்ஸ் தலைவர் எபெர்ஹார்டு கெர்ன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இரண்டு கார்களுக்கும் தொடர்ந்து வரவேற்பு இருப்பதால் இந்தியாவிலேயே இந்த கார்களை அசெம்பிளிங் செய்வது குறித்து பென்ஸ் பரிசீலித்து வருகிறது.

அடுத்த ஆண்டு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பென்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி, இந்தியாவிலேய அசெம்பிளிங் துவங்கப்பட்டால், இந்த இரண்டு கார்களின் விலை குறையவோ அல்லது ஏற்றாமல் இருப்பதற்கோ வாய்ப்பு இருக்கிறது..

Most Read Articles
English summary
A class and B class Compact luxury models gets overwhelming response in Indian market, says Eberhard kern, CEO of Mercedes Benz India.
Story first published: Friday, August 16, 2013, 18:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X