இந்தியாவில் ஆர் கிளாஸ் விற்பனையை நிறுத்த பென்ஸ் முடிவு

ஃபேபியா விற்பனையை நிறுத்தப் போவதாக ஸ்கோடா அறிவித்த அடுத்த சில நாட்களில் ஆர் கிளாஸ் விற்பனையை நிறுத்தப் போவதாக பென்ஸ் அறிவித்திருக்கிறது.

கடந்த 2010ம் ஆண்டு ஆர் கிளாஸ் காரை விற்பனைக்கு கொண்டு வந்தது மெர்சிடிஸ் பென்ஸ். 7 சீட்டர் சொகுசு எம்பிவி காரான ஆர் கிளாஸ் காரை எம் கிளாஸ் மற்றும் ஜிஎல் கிளாஸ் காரை நிலைநிறுத்தியது பென்ஸ்.

Benz R Class

அமெரிக்காவின் அலபாமாவிலுள்ள துகலூசா ஆலையில் மட்டும்தான் இந்த கார் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்துதான் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஆர் கிளாஸ் காருக்கு போதிய வரவேற்பு இல்லை. விற்பனையில் தொடர்ந்து பின்தங்கி இருப்பதால் இந்தியாவில் ஆர் கிளாஸ் விற்பனையை நிறுத்திவிட பென்ஸ் முடிவு செய்துள்ளது.

ஆர் கிளாஸ் காரில் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சினுடன் முதலில் விற்பனைக்கு வந்தது. கடந்த ஆண்டுதான் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் புதிய ஜிஎல் கிளாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆர் கிளாஸுக்கு விடை கொடுத்த பென்ஸ் திடமாகவே முடிவு எடுத்துவிட்டது.

Most Read Articles
English summary
Now Mercedes Benz will discontinue its R Class from India. The R-Class was launched in India in late 2010. This Luxurious MPV has failed to gather momentum in India. As a result, Mercedes will axe the R Class in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X