ஆபத்பாந்தவனாக உதவும் கார் கருப்புப் பெட்டி

By Saravana

காரில் ஏற்படும் பிரச்னையை கண்டறிந்து முன்கூட்டியே தெரிவிக்கும் புதிய சாதனத்தை இங்கிலாந்தை சேர்ந்த ஆர்ஏசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அவசர சாலை உதவி மற்றும் கார் இன்ஸ்யூரன்ஸ் சேவையை வழங்கி வரும் ஆர்ஏசி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வாகனங்களில் இந்த தீப்பெட்டி அளவிலான கருப்புப் பெட்டியை பொருத்தியிருக்கிறது.

BMW X1

கார் கம்ப்யூட்டருடன் இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கருப்புப் பெட்டி காரின் எஞ்சின், டிரான்ஸ்மிஷன், பேட்டரி, பிரேக் உள்ளிட்ட அனைத்து முக்கிய பாகங்களில் ஏற்படும் தொழில்நுட்பப் பிரச்னை குறித்து முன்கூட்டியே டிரைவரின் மொபைல்போன் அல்லது அருகிலுள்ள நடமாடும் அவசர சாலை உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துவிடும்.

இது வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என ஆர்ஏசி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் 1,700 வாகனங்களில் இந்த கருப்புப் பெட்டி பொருத்தப்பட்டிருப்பதாகவும், அடுத்து அதிக அளவில் இந்த கருப்புப் பெட்டி வாடிக்கையாளர்களின் வாகனங்களில் பொருத்தப்பட இருப்பதாகவும் ஆர்ஏசி நிர்வாகம் கூறியிருக்கிறது.

Most Read Articles
English summary
A newly introduced ‘black box' for cars will detect and analyze problems in your car and alert you about it via email or text message. Vehicles fitted with this device have been launched by RAC motoring organization in the United Kingdom.
Story first published: Thursday, March 14, 2013, 11:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X