பிஎம்டபிள்யூவின் எம்8 சூப்பர் கார்... சிறப்பு தகவல்கள்

ஆட்டோமொபைல் துறையில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் பிஎம்டபிள்யூவின் எம்8 சூப்பர் காரின் உற்பத்தி 2016ம் ஆண்டு துவங்கப்பட உள்ளது. பிஎம்டபிள்யூவின் நூற்றாண்டு விழாவையொட்டி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் அறிமுகம் செய்யப்படும்போது அதிக விலை கொண்டதாகவும், பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாகவும் இருக்கும்.

முழுவதும் கார்பன் ஃபைபரால் பாடி கட்டமைக்கப்பட்டுள்ளது. உறுதியும், பவர்ஃபுல் எஞ்சினுடன் பிஎம்டபிள்யூவின் பிராண்டு மதிப்பை அதிகரிக்க வரும் இந்த புதிய சூப்பர் கார் குறித்து அறிந்து கொள்ள உலக அளவில் ஆட்டோமொபைல் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த புதிய சூப்பர் கார் பற்றிய கூடுதல் தொழில்நுட்ப தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கார்பன் ஃபைபர் பாடி

கார்பன் ஃபைபர் பாடி

இதன் பாடி கார்பன் ஃபைபர் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மிக குறைவான எடையும், அதேவேளை அதிக உறுதியும் கொண்டதாகவும் இருக்கும். அடுத்த ஆண்டு பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்ய இருக்கும் ஐ8 ஹைபிரிட் சூப்பர் காரை விட குறைவான எடை கொண்டதாக இருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

இதில் ஆற்றல் வாய்ந்த 4.4 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

பவர்

பவர்

இந்த காரின் எஞ்சின் 600 குதிரைசக்தி திறனை வாரி இறைக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சமாக 320 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

 உந்துசக்தி

உந்துசக்தி

0-96 கிமீ வேகத்தை வெறும் மூன்றே நொடிகளில் தொட்டுவிடும்.

மார்க்கெட்டிங் கொள்கை

மார்க்கெட்டிங் கொள்கை

அடுத்த ஆண்டு ஐ8 ஹைபிரிட் சூப்பர் காரையும், 2016ல் இந்த எம்8 சூப்பர் காரையும் அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இரு கார்களின் விற்பனையும் ஒன்றுக்கொன்று பாதிக்காது என்று அந்த நிறுவனம் கருதுகிறது.

ஹைபிரிட் கார்

ஹைபிரிட் கார்

ஐ8 கார் போன்றே இந்த காரிலும் பெட்ரோல் எஞ்சினுடன் எலக்ட்ரிக் மோட்டாரையும் பொருத்தி ஹைபிரிட் காராக பிஎம்டபிள்யூ களமிறக்க உள்ளது.

Most Read Articles
English summary
German car maker BMW has announced to commence the production of the M8 supercar in 2016. It may be noted that the BMW M8 supercar was designed to celebrate BMW’s 100th anniversary and will become the most expensive and powerful M Power car when launched.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X