ஒரே உலகம், ஒரே பைக்... பிஎம்டபிள்யூ பைக்கில் ஓர் சாகசப் பயணம்!

வரும் அக்டோபரில் நடைபெற இருக்கும் மிலன் ஆட்டோ ஷோவில் புதிய ஆர் 1200ஜிஎஸ் சூப்பர் பைக்கை பிஎம்டபிள்யூ அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த பைக்கின் பராக்கிரமங்களை உலகுக்கு பரைசாற்றும் வகையில், சாகசப் பயணத்தை அறிவித்தது. உலகின் 5 கண்டங்களில் செல்லும் வகையில் இந்த சாகசப் பயண திட்டம் உருவாக்கப்பட்டது.

மேலும், இந்த சாகசப் பயணத்தில் கலந்து கொள்வதற்கான போட்டி ஒன்றையும் அறிவித்தது. மொத்தம் 12,000 பேர் விண்ணப்பித்தனர். அதில், 5 பேரை தேர்வு செய்து இந்த சாகசப் பயணத்தை நடத்தியது. இதில், பெண் ஒருவரும் அடங்குவார். இந்த 5 பேரும் தொடர் ஓட்டம் போன்று ஒவ்வொரு கண்டத்திலும் ஒவ்வொருவராக பங்குபெற்றனர்.

நீதிபதிகள்

நீதிபதிகள்

ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் அட்ரியன் பிராடி, ரேஸ் வீரர் ஜுட்டா கிளென்ஸ்மித், ஹாலிவுட் ஆக்ஷன் நடிகர் ரிக் யூனி மற்றும் சாகச பயணம் செல்வதில் புகழ்பெற்ற டிவி நடிகர் சார்லி பூர்மேன் ஆகியோர் நீதிபதிகளாக இருந்து 5 பேரையும் தேர்வு செய்தனர்.

தேர்வு

தேர்வு

மனவலிமை, டிரைவிங் திறமை, உடல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடந்தது.

அதிர்ஷடசாலிகள்

அதிர்ஷடசாலிகள்

தேர்வு செய்யப்பட்ட 5 பேரும் இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள்.

ஒரே பைக்

ஒரே பைக்

இந்த சாகசப் பயணத்திற்கு ஒரே ஒரு பிஎம்டபிள்யூவின் ஆர்1200ஜிஸ் பைக் பயன்படுத்தப்பட்டது.

சாகசப் பயணம்

சாகசப் பயணம்

கடந்த ஜனவரி 25ந் தேதி முதல் லாவோஸ் தீவில் சாகசப் பயணம் துவங்கியது. இத்தாலியை சேர்ந்த அலசியோ சிகோலினி பிஎம்டபிள்யூ ஆர் 1200டிஎஸ் பைக்கில் பயணத்தை துவங்கினார்.

லாவோஸ் பயணம்

லாவோஸ் பயணம்

மொத்தம் 9 நாட்கள் லாவோசில் சாகசப் பயணம் சென்றார். படு பயங்கர சாலைகள், மலைப் பாதைகள் வழியாக தனது பயணத்தை நிறைவு செய்தார்.

 நியூசிலாந்து

நியூசிலாந்து

அடுத்து நியூசிலாந்து சென்ற இந்த பைக்கை பவேரியாவை சேர்ந்த ஹெர்பரட் அங்கர்(49) தனது சாகசப் பயணத்தை துவங்கினார்.

தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்கா

நியூசிலாந்தில் 8 நாட்கள் பயணத்திற்கு பின் தென் ஆப்ரிக்காவுக்கு இந்த பைக் சென்றது. அங்கு ஸ்பெயினை சேர்ந்த சால்வேடார் செவேரியா(41) என்பவர் அடுத்த பயணத்தை துவங்கினார்.

கேப் டவுனில் வரவேற்பு

கேப் டவுனில் வரவேற்பு

கேப்டவுனில் 40 பிஎம்டபிள்யூ ஜிஎஸ் பைக் உரிமையாளர்கள் ஒன்றுகூடி சால்வேடாரை வரவேற்று இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

அடுத்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெஃபான்(39) அமெரிக்காவில் தனது பயணத்தை துவங்கினார். 10 நாட்கள் அமெரிக்காவின் மேற்குப்பகுதிகளில் கரடு முரடான சாலைகளில் அவர் கடந்த வந்து தனது பயணத்தை நிறைவு செய்தார்.

ஐரோப்பா

ஐரோப்பா

இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டெபானி ரோவ் எனும் பெண் அடுத்த ஐரோப்பாவில் தனது சாகசப் பயணத்தை துவங்கினார். சவால் நிறைந்த தனது பயணத்தை மூனிச் நகரில் கடந்த 13ந் தேதி நிறைவு செய்தார்.

 மொத்த பயண தூரம்

மொத்த பயண தூரம்

மொத்தம் 12,600 கிமீ தூரத்தை இந்த பைக் 44 நாட்களில் கடந்துள்ளது. இந்த சாகசப் பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாததாகவும், த்ரில் நிறைந்ததாகவும் இருந்ததாக இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிஎம்டபிள்யூ பைக்கில் சாகச பயணம்

பிஎம்டபிள்யூ பைக்கில் சாகச பயணம்

பிஎம்டபிள்யூ பைக்கில் சாகச பயணம்

பிஎம்டபிள்யூ பைக்கில் சாகச பயணம்

பிஎம்டபிள்யூ பைக்கில் சாகச பயணம்

பிஎம்டபிள்யூ பைக்கில் சாகச பயணம்

பிஎம்டபிள்யூ பைக்கில் சாகச பயணம்

பிஎம்டபிள்யூ பைக்கில் சாகச பயணம்

பிஎம்டபிள்யூ பைக்கில் சாகச பயணம்

பிஎம்டபிள்யூ பைக்கில் சாகச பயணம்

Most Read Articles
English summary
The fifth generation BMW R 1200 GS Adventure Touring motorcycle was revealed in October last year in Milan. To prove the BMW R 1200 GS's off roading and touring capability to the world, BMW started the One World. One R 1200 GS Adventuring campaign.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X