அனைத்து ரகத்திலும் எலக்ட்ரிக் கார் மாடல்கள்: பிஎம்டபிள்யூ மெகா திட்டம்

அனைத்து ரகத்திலும் எலக்ட்ரிக் அல்லது ஹைபிரிட் கார் மாடல்களை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றிருக்கும் நாடுகளில் கார்களுக்கான மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.

2020ம் ஆண்டில் ஒரு கிலோமீட்டருக்கு 95 கிராம் கார்பனை வெளியிடும் வகையில் கார்களை தயாரிக்கும் வகையில் ஐரோப்பிய யூனியன் இலக்கு வைத்துள்ளது. இதற்கு தகுந்தவாறு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு கார் நிறுவனங்கள் இப்போதே தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

BMW i8

இந்த நிலையில், சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப கார்களை தயாரிப்பதற்கு ஹைபிரிட் அல்லது எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்காக, அனைத்து ரக கார்களிலும் ஹைபிரிட் அல்லது எலக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஐ3 மற்றும் ஐ8 ஹைபிரிட் கார்கள் மிகச் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதே பாணியில் அனைத்து கார்களையும் களமிறக்க முடிவு செய்துள்ளது.

Most Read Articles
English summary
MW is comfortable with going electric, unlike Audi. The Bavarian automaker has proved this by taking its first major steps towards electrification with its i3 electric city car and the i8 electric sports car. Going forward, however, BMW is ready to embrace electrification to a much greater extent.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X