கார் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வங்கிகள் முடிவு!

By Saravana
Car loan
கார் வாங்குவதை ஊக்கப்படுத்தும் விதமாக கார் கடனுக்கான வட்டி வீதத்தை குறைக்க முன்னணி வங்கிகள் முடிவு செய்துள்ளன.

கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு கார் விற்பனையில் சுணக்கமான நிலை நீடிக்கிறது. சலுகைகள், தள்ளுபடிகளை அறிவித்தும் கார் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

கார் நிறுவனங்கள் மட்டுமல்லாது இந்த துறையில் பெரும் தொடர்பு வைத்திருக்கும் கார் கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் வர்த்தகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கார் வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக கார் கடனுக்கான வட்டியை குறைக்க முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதனால், கார் விற்பனையில் சிறிது முன்னேற்றம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. கோடக் மஹிந்திரா பிரைம் நிறுவனம் கார் கடன் வட்டி வீதத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறது.

இதேபோன்று, பல்வேறு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கார் கடனுக்கான வட்டியை விரைவில் குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Car loans are expected to get cheaper. Bankers expect these rates to dip the basis points (bps).
Story first published: Monday, January 21, 2013, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X