காருக்குள் உராய்வு சத்தம் கேட்காத புதிய டயர்: கான்டினென்டல் அறிமுகம்

நெடுஞ்சாலைகளில் காரை வேகமாக ஓட்டும்போது, டயரின் சத்தம் கேபினுக்குள் அதிகப்படியாக கேட்கும். டிரைவருக்கும், பயணிகளுக்கும் இந்த சத்தம் இடையூறாக இருக்கும்.

இந்த குறையை போக்கும் விதத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டயரை கான்டினென்டல் வெளியிட்டு இருக்கிறது. பிற டயர்களை காட்டிலும் இதிலிருந்து வரும் உராய்வு சத்தம் மிக மிக குறைவாக இருக்கும்.

ரொம்ப சைலன்ட்

ரொம்ப சைலன்ட்

கான்டிசைலன்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த டயரின் உள்புறத்தில் டிரெட் பட்டனை ஒட்டிய பிரத்யேக பூச்சு செய்யப்பட்டுள்ளது. இதனால், டயரிலிருந்து வெளிப்படும் உராய்வு சத்ததத்தை இந்த பூச்சு வெகுவாக குறைக்கிறது.

சப்த அளவு

சப்த அளவு

இந்த பிரத்யேக டயரிலிருந்து வெளிப்படும் சப்தத்தின் அளவு வெறும் 9 டெசிபல் அளவுக்குள் இருக்கும்.

எக்ஸ்ட்ரா கோட்டிங்

எக்ஸ்ட்ரா கோட்டிங்

இந்த டயரும் சாதாரண டயர்களைப் போன்றே தயாரிக்கப்படுகிறது. பட்டனுக்கு உள்புறத்தில் கொடுக்கப்படும் பூச்சு மட்டும் கூடுதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த டயரின் பக்கவாட்டில் ஆர்01 என்ற முத்திரை இடம் பெற்றிருக்கும்.

பாதிப்பு

பாதிப்பு

இந்த கூடுதல் பூச்சு காரணமாக டயரின் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் காரின் கையாளுமையில் எந்தவித பாதிப்பும் இராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி காரில்...

ஆடி காரில்...

ஆடியின் ஆர்எஸ்6 அவந்த் மற்றும் ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் கார்களில் இந்த டயர் முதலில் பொருத்தப்பட்டு வருகிறது. ஆர்எஸ்6 காரில் 285/30 ZR 21 என்ற அளவு கொண்ட டயரும், ஆர்எஸ் 7 காரில் 275/30 ZR 21 என்ற அளவுடைய டயரும் பொருத்தப்படுகிறது. அடுத்ததாக, ஆடி ஏ8 காரிலும் இந்த விசேஷ டயர் பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Car manufacturers demand tyres that not only demonstrate top performance but are also quiet, helping to increase car comfort. Continental has introduced ContiSilent, a new technology that substantially reduces tyre noise inside the cabin by up to 9 dB. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X