ஆண்டு இறுதியில் டட்சன் கார்களை அறிமுகப்படுத்த நிசான் திட்டம்

By Saravana
Nissan Micra
இந்த ஆண்டு இறுதியில் டட்சன் பிராண்டில் குறைந்த விலை கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த நிசான் திட்டமிட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் கார் மார்க்கெட்டுகளுக்காக டட்சன் பிராண்டில் குறைந்த விலை கார்களை தயாரிக்க நிசான் திட்டமிட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்குள் மொத்தம் 10 கார்களை டட்சன் பிராண்டில் களமிறக்க நிசான் முடிவு செய்துள்ளது.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மைக்ராவை விட குறைந்த விலை கொண்ட ஹேட்ச்பேக் கார்களும் டட்சன் பிராண்டில் வர இருக்கிறது. இந்த நிலையில், ஐெனீவா மோட்டார் ஷோவிற்கு வந்த நிசான் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் தகயுகி இஷிடா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, டட்சன் பிராண்டில் கார்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவதாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"இந்த விவகாரத்தை ஜப்பானில் உள்ள தலைமையகம் கையாண்டு வருகிறது.

இருப்பினும், இதனை செயல்படுத்துவது சம்பந்தப்பட்ட மார்க்கெட்டில் செயல்படும் நிர்வாகம்தான் செய்ய வேண்டும். டட்சன் பிராண்டில் குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்துவதற்கான கால அளவை தலைமையகம் விரைவில் எடுக்கும்," என்றார்.

இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் டட்சன் பிராண்டில் குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிசான் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டட்சன் பிராண்டில் முதலில் 2 கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவை இரண்டுமே மைக்ராவைவிட, அதாவது, ரூ.4 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
We know Nissan has huge plans for India, with the Japanese having announced last year that it plans on introducing 10 new affordable models for the Indian market to increase its market share by 10 percent, by 2016. The other comment made by Nissan was about introducing the Datsun brand in India.
Story first published: Saturday, March 9, 2013, 14:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X