டிசி கைவண்ணத்தில் உருவான ஹூண்டாய் ஐ20 கார்

By Saravana

நாட்டின் பிரபல கார் கஸ்டமைஸ் நிறுவனமாக திகழும் டிசி டிசைன்ஸ் பல்வேறு கார்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி தருகிறது. கூடுதல் வசதிகள் மற்றும் தோற்றத்தில் மட்டும் மாறுதல்களை செய்து கொடுக்கிறது.

மேலும், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய மாடல்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை மாற்றிக் கொள்ள முடியும். அந்த வகையில், தற்போது ஹூண்டாய் ஐ20 காரின் கஸ்டமைஸ் கான்செப்ட்டை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வெள்ளை நிற ஐ20 காரில் இளஞ்சிவப்பு நிற ஸ்டிக்கர்களுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த காரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 முகப்பு

முகப்பு

ஐ20 காரின் முகப்பின் பெரும்பான்மையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரில், பம்பர் ஆகியவை டிசியின் கைவண்ணத்தில் காரின் அழகு குறையாத வகையில் மாற்றப்பட்டுள்ளது.

ஆக்சஸெரீஸ்

ஆக்சஸெரீஸ்

சைடு ஸ்கர்ட் கொடுக்கப்பட்டு அதன் நடுவில் இளஞ்சிவப்பு நிற பூச்சு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பின்புற பம்பரின் டிசைனும் மாற்றப்பட்டு இளஞ்சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளதோடு, அதில் இரண்டு புகைப்போக்கி குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

டிசி டிசைன் ஐ20 காரில் 7 ஸ்போக்குகள் கொண்ட புதிய அலாய் வீல்கள் காருக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை அளிக்கின்றன.

 இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் கருப்பு, இளஞ்சிவப்பு வண்ணக் கலவை கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதில், இருக்கை, டேஷ்போர்டு உள்ளிட்ட பெரும்பான்மை இடங்களில் இளஞ்சிவப்பு வண்ணமும், கதவுகளில் கருப்பு நிறத்தின் ஆதிக்கமும் அதிகம் இருக்கின்றன.

இருக்கைகள்

இருக்கைகள்

மிக மிக சொகுசான பயணத்தை தரும் வகையிலான லெதர் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

 கஸ்டமைஸ்

கஸ்டமைஸ்

இந்த கான்செப்ட் மாடலில் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு இணங்க கூடுதல் வசதிகளை சேர்த்து பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளதாக டிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விலை

விலை

விலை விபரம் அறிவிக்கப்படவில்லை.


Most Read Articles
Story first published: Monday, November 4, 2013, 13:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X