டிசியின் கஸ்டமைஸ் ரெனோ டஸ்ட்டர் படங்கள் வெளியீடு!

விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் டஸ்ட்டரின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட மாடலின் டீசரை டிசி நிறுவனம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. வாடிக்கையாளர்கள் மத்தியிலும், டிசியின் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், கஸ்டமைஸ் செய்யப்பட்ட டஸ்ட்டரின் படங்களை சற்றுமுன் டிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

டிசி கைவண்ணத்தில் டஸ்ட்டர்

டிசி கைவண்ணத்தில் டஸ்ட்டர்

டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா எக்ஸ்யூவி உள்ளிட்ட யுட்டிலிட்டி கார்களை கஸ்டமைஸ் செய்து வாடிக்கையாளர்களிடம் மதிப்பை பெற்ற டிசி நிறுவனம் தற்போது டஸ்ட்டரை கஸ்டமைஸ் செய்து தருவதாக அறிவித்துள்ளது.

முகப்பு

முகப்பு

முகப்பை எல்இடி விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டாலும் மாற்றப்பட்டுள்ளது. கிரில்லை பிடுங்கியெறிந்துவிட்டு புதிய கிரில்லை மாட்டியதுடன் அதற்கு மேல் டிசியின் பேட்ஜ் பொறிக்கப்பட்டிருக்கிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

மரவேலைப்பாடுகளால் டஸ்ட்டரின் இன்டிரியரை இழைத்துள்ளது உட்பக்க கூரை, ஆர்ம்ரெஸ்ட், டேஷ்போர்டு, கதவுகள் என எங்கு திரும்பினாலும் மரவேலைப்பாடுகள் மனதை கரைய வைக்கிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

4 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதியுடன் புதிய டஸ்ட்டர் இருக்கை வசதி அமைக்கப்பட்டிருக்கிறது.

சொகுசான இருக்கைகள்

சொகுசான இருக்கைகள்

படுக்கை போன்று மடக்கி விரிக்கும் வசதி கொண்ட மிக மிக சொகுசான கிங் சைஸ் லெதர் இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. நமக்கு வசதியாக நீட்டி, மடக்கவும், சாய்த்துக் கொள்ளவும் முடியும்.

வசதிகள்

வசதிகள்

பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கு சிறிய டிரே, டிவி திரை, வசதியான ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

பொத்தான்கள்

பொத்தான்கள்

இருக்கையை அமர்ந்தபடியே எளிதாக நமக்கு தகுந்தாற்போல் நீட்டிக் கொள்ளவும், சாய்த்துக் கொள்வதற்கும் இருக்கையின் பக்கவாட்டில் பொத்தான்கள் இருக்கின்றன. ரீடிங் விளக்குகளுக்கான சுவிட்சுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

தடுப்பு

தடுப்பு

இரண்டு பின் இருக்கைகளும் ஆர்ம் ரெஸ்ட் மூலம் தடுக்கப்பட்டுள்ளன.

மேட் ஃபினிஷ்

மேட் ஃபினிஷ்

முகப்பை தவிர வேறு மாற்றங்கள் இல்லை. மேட் பினிஷிங் செய்யப்பட்டிருப்பதால் தனித்துவம் தெரிகிறது. 10 ஸ்போக் அலாய் வீல்களும் கம்பீரம் தருகிறது.

செலவு

செலவு

ஒரு புதிய டஸ்ட்டரையும், மூன்றரை லட்ச ரூபாயையும் எடுத்துக் கொண்டு டிசியிடம் சென்றால் இதுபோன்று மாற்றிக் கொண்டு வரலாம்.

Most Read Articles
English summary
DC Design has now revealed the custom Renault Duster on its Facebook page. Several images, revealing the exterior and the interior are out on Facebook. Cost of customization starts at INR 3.49 lakhs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X