ஒரே முறையில் 4 சாதனைகளை பாக்கெட்டில் போட்ட எலக்ட்ரிக் கார்!

By Saravana

மணிக்கு 330 கிமீ வேகத்தில் பறந்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளது டிரேசன் ரேஸிங் அணியின் எலக்ட்ரிக் ரேஸ் கார். இங்கிலாந்து நாட்டின் முன்னாள் அமைச்சரும், பிரபல கார் பந்தய வீரருமான டிரேசன் நடத்தி வரும் கார் வடிவமைப்பு மையம் இந்த எலக்ட்ரிக் காரை வடிவமைத்துள்ளது.

Lola B12 69/EV என்ற பெயரிடப்பட்ட இந்த எலக்ட்ரிக் ரேஸ் கார் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் மணிக்கு 328.6 கிமீ வேகத்தில் பறந்து புதிய சாதனை படைத்தது. டிரெசன்தான் காரை ஓட்டினார். ஆனால், முந்தைய சாதனையில் திருப்தியடையாத அவர் தற்போது மீண்டும் அந்த எலக்ட்ரிக் காரை அதிவேகத்தில் செலுத்தி புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். இதுதவிர, இந்த சோதனையின்போது மேலும் 3 புதிய சாதனைகளையும் இந்த எலக்ட்ரிக் கார் மூலம் நிகழ்த்தப்பட்டது.

முதல் சாதனை

முதல் சாதனை

ஒரு கிலோமீட்டர் தொலைவை இருமார்க்கத்திலும் கடந்த சராசரி வேகத்தின்படி மணிக்கு 330.139 கிமீ வேகத்தில் கடந்துள்ளார். யார்க்ஷையரில் உள்ள எல்விங்டன் விமானதளத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

2- வது சாதனை

2- வது சாதனை

கால் கிலோமீட்டர் தூரத்தை 9.742 வினாடிகளில் கடந்து இரண்டாவது சாதனையை பதிவு செய்துள்ளது டிரேசன் ரேஸிங் அணியின் லோலா எலக்ட்ரிக் கார்.

3- வது சாதனை

3- வது சாதனை

ப்ளையிங் ஸ்டார்ட் புள்ளியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தை அதிவேகத்தில் கடந்து புதிய சாதனையையும் படைத்துள்ளது இந்த எலக்ட்ரிக் கார்.

4- வது சாதனை

4- வது சாதனை

இங்கிலாந்தில் ப்ளையிங் ஸ்டார்ட் புள்ளியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தை அதிவேகமாக கடந்த கார் என்ற பெருமையையும் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த சாதனை அங்கீகாரம் பெறுவதற்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

 லோலா எலக்ட்ரிக் கார்

லோலா எலக்ட்ரிக் கார்

டிரேசன் ரேஸிங் லோலா எலக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார்கள் அதிகபட்சமாக 850 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த காரின் பாடி பேனல்கள் உள்ளிட்ட பல பாகங்கள் பேட்டரி போன்று ஆற்றலை சேமிக்கும் திறன் கொண்டது. இதனை Structural Battery என்று டிரேசன் ரேஸிங் குழு குறிப்பிடுகிறது.

 வயர்லெஸ் சார்ஜ்

வயர்லெஸ் சார்ஜ்

இந்த காரை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய முடியும் என்பது கூடுதல் சுவாரஸ்யமான விஷயம். மேலும், 995 கிலோ எடை கொண்ட இந்த காரை அதிவேகத்தில் பீறிட்டு செல்வதும், குறிப்பிட்டத் தூரத்திற்குள் அதனை நிறுத்துவதும் மிகவும் விந்தையான விஷயம். பெட்ரோல் கார்களையே விஞ்சும் அளவுக்கு இதன் பெர்ஃபார்மென்ஸ் இருப்பதாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் வியந்து கூறுகின்றனர்.

Most Read Articles
English summary
Drayson Racing Technologies, operated by Lord Drayson of UK, if you may remember, set a land speed record back in June 2013 for electric cars weighting below 1000 kg. The speed set by Lord Drayson them was 328.6 km/h. Less than four months later that record has been broken, by Drayson Racing once again.
Story first published: Friday, October 18, 2013, 12:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X