விபத்தை விலைக்கு வாங்கும் செருப்பு - ஓர் பகீர் ஆய்வு

செருப்பு அணிந்து கார் ஓட்டும்போது விபத்தில் சிக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. இங்கிலாந்தை சேர்ந்த ஷெய்லஸ் என்ற காப்பீட்டு நிறுவனம் சமீபத்தில் வாகன விபத்துக்களுக்கான காரணிகள் குறித்து ஆய்வு நடத்தியது.

இதில், ஷூ அணிந்து ஓட்டும்போதைவிட செருப்பை அணிந்து வாகனம் ஓட்டும்போது விபத்துக்களில் சிக்கும் வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செருப்பு பகீர்

செருப்பு பகீர்

அமெரிக்காவில் மட்டும் செருப்பு அணிந்து கார் ஓட்டியதால் 1.4 மில்லியன் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக மற்றொரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

காரணம்

காரணம்

ஷூ எனப்படும் கால் பூட்டணிகளைவிட செருப்பை அணிந்து வாகனம் ஓட்டும்போது ஆக்சிலேட்டரிலிருந்து பிரேக்குக்கு காலை மாற்றுவதற்கு 0.1 நொடி தாமதம் ஏற்படுகிறதாம். இதனால், அவசர சமயங்களில் பேராபத்தை ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேக் ஃபோர்ஸ்

பிரேக் ஃபோர்ஸ்

காலை மாற்றுவதற்கு தாமதம் ஏற்படுவதோடு மட்டுமின்றி, செருப்பை அணிந்து பிரேக்கை அழுத்தும்போது கொடுக்கப்படும் திறன் 3 சதவீதம் குறைவாக இருக்கிறதாம்.

சரியான காலணி இல்லை

சரியான காலணி இல்லை

50 சதவீத வாகன ஓட்டிகள் தங்களது காலுக்கு பொருத்தமான காலணிகளை அணிவதில்லையாம். இதுவும் விபத்துக்களுக்கு வழி கோலுகின்றன என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பெடலில் சிக்கும் ஆபத்து

பெடலில் சிக்கும் ஆபத்து

சாதாரண செருப்பு அணிந்து ஓட்டும்போது பெடல்களுக்கு இடையில் சிக்கும் ஆபத்தும் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஷூ பெஸ்ட்

ஷூ பெஸ்ட்

கார் ஓட்டும்போது சரியான அளவு கொண்ட கால் பூட்டணிகளை அணிந்து ஓட்டுவது டிரைவருக்கு மட்டுமல்ல, சக பயணிகளுக்கும் நன்மை பயக்கும். செருப்புதானே என்று இதனை சிறிய விஷயமாக பார்க்காதீர்கள் என்று பயமுறுத்தியுள்ளது ஷெய்லஸ் ஆய்வு.

Most Read Articles
English summary
As per the recent survey, wearing flip flops can hamper the movement between the brake and accelerator pedals, increasing the time by about 0.1 seconds. Not just that, but it can also reduce driver's braking force by up to 3 percent as against shoes.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X