டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் சாதக, பாதகங்கள்

By Saravana

வாசகர் கவுதம் வேண்டுகோளுக்கிணங்க இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறேன். நகர்ப்புற நெரிசலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களை ஓட்டி அலுத்து போய் கை, கால் வலி கண்டவர்களுக்கு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்கள் தற்போது வலி நிவாரணியாக மாறி வருகின்றன.

விலை அதிகம், மைலேஜ் குறைவு போன்ற எதிர்மறை அம்சங்கள் இருந்தாலும், கிளட்ச் பிரச்னையின்றி எளிதாக ஓட்டுவதற்கு ஆட்டோமேட்டிக் கார்கள் சிறந்த தீர்வாக கிடைக்கின்றன. இந்த நிலையில், ஆட்டோமேட்டிக் கார்களில் தற்போது டிசிடி எனப்படும் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் எனப்படும் டிரான்ஸ்மிஷன் பிரபலமாகி வருகிறது. இதன் செயல்பாடு, சாதக, பாதகங்களை ஸ்லைடரில் காணலாம்.

 டிசிடி செயல்படும் விதம்

டிசிடி செயல்படும் விதம்

இரண்டு மேனுவல் கியர் பாக்ஸ்கள் மூலம் பவரை எஞ்சினுக்கு ஒரே சாஃப்டில் வீல்களுக்கு கடத்தும் தத்துவத்தில் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், இதில் கிளட்ச் பெடல்களுக்கு பதிலாக, எலக்ட்ரானிக் முறையில் வேகம் கண்காணிக்கப்பட்டு, ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் கியர்கள் மாற்றம் நிகழ்கின்றன. ஒற்றைப்படை கியர்களை(1,3,5 மற்றும் ரிவர்ஸ்) ஒரு கிளட்சும், இரட்டைப் படை கியர்களை(2,4) மற்றொரு கிளட்சும் கட்டுப்படுத்தும்.

 ஆற்றல் விரயம் தவிர்ப்பு

ஆற்றல் விரயம் தவிர்ப்பு

மேனுவல் கியர்பாக்ஸ் கார்களில் கியர் மாற்றும்போது கிளட்சை முழுவதுமாக மிதிக்கும்போது எஞ்சினிலிருந்து வீல்களுக்கு பவர் செல்வது தடைபடும். ஆனால், இந்த ஆட்டோமேட்டிக் கார்களில் கியர் மாற்றும்போது எஞ்சினிலிருந்து வீல்களுக்கு செலுத்தப்படும் ஆற்றல் தடைபடாமல் கியர் மாற்றம் நிகழும். இதனால், ஆற்றல் விரயம் அதிகமிருக்காது.

எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

கார் எந்த வேகத்தில் சென்றாலும் அதிக எரிபொருள் சிக்கனத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான வடிவமைப்பை பெற்றுள்ளது. குறிப்பாக, நெடுஞ்சாலையில் செல்லும்போது சாதாரண ஆட்டோமேட்டிக் கார்களைவிட இந்த டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்கள் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும்.

 சிட்டிக்கு பெஸ்ட்

சிட்டிக்கு பெஸ்ட்

கிளட்ச் பெடல் இருக்காது என்பதால், நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு சிறப்பானதாக இருக்கும். மேலும், சாதாரண ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களைவிடவும், அதிக பிக்கப் கொண்டிருப்பதோடு மேனுவல் கியர் பாக்ஸ் கார்களைவிட அதிவேகத்தில், அதாவது 100 மில்லிசெகன்ட்டுக்கும் குறைவான நேரத்தில் கியர் மாற்றம் நிகழும்.

சொகுசு

சொகுசு

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களைவிட டிசிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களில் கியர் மாற்றும்போது ஏற்படும் அதிர்வுகள் உள்ளிட்டவை

ஃபோக்ஸ்வேகன் டிஎஸ்ஜி

ஃபோக்ஸ்வேகன் டிஎஸ்ஜி

ஃபோக்ஸ்வேகனின் டிஎஸ்ஜி எனப்படும் டியூவல் கிளட்ச் டிராஸ்மிஷன் தற்போது மிகச் சிறந்த டிசிடி டிரான்ஸ்மிஷனாக இருக்கிறது.

முதலீடு அதிகம்

முதலீடு அதிகம்

அசெம்பிளி லைனில் அதிக மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால், அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதன் காரணமாக காரின் விலையையும் அதிகம் நிர்ணயிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

ஓவர்டேக்கில் சொதப்பும்

ஓவர்டேக்கில் சொதப்பும்

ஓவர் டேக் செய்யும்போது திடீரென ஆக்சிலேட்டரை கூடுதலாக கொடுக்கும்போது சிறிதளவு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளும். உடனடி பிக்கப் இருக்காது.

ஸ்மூத் குறைவு

ஸ்மூத் குறைவு

சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அளவுக்கு இது ஸ்மூத் இருக்காது. கியர்கள் மாறும்போது சிறிய அதிர்வு தெரியும்.

மைலேஜ்

மைலேஜ்

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களைவிட ஒப்பிடும்போது டிசிடி கார்கள் குறைவான மைலேஜ் தரும்.

Most Read Articles
Story first published: Friday, September 6, 2013, 16:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X