லிட்டருக்கு 35 கிமீ செல்லும் ஓர் சூப்பர் சிட்டி கார்!

போக்குவரத்து, மக்களின் பயன்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு இவற்றை மையமாகக் கொண்டு புதிய கார்களை வடிவமைப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த எலியோ மோட்டார்ஸ் நிறுவனம் நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற புதிய மூன்று சக்கர காரை வடிவமைத்துள்ளது.

தரமான கட்டமைப்பு, அதிக எரிபொருள் சிக்கனம், சொகுசு என அனைத்தையும் ஒருங்கே தரும் வகையில் இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. நவீன பாதுகாப்பு அம்சங்களுக்கும் பஞ்சமில்லாமல் வந்திருக்கும் இந்த புதிய கார் குறித்த சுவையான கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 70 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சமாக 160 கிமீ வேகத்தில் செல்லும். 0-100 கிமீ வேகத்தை 9.6 வினாடிகளில் கடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிறப்பான பேலன்ஸ்

சிறப்பான பேலன்ஸ்

இது ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. எனவே, புவியீர்ப்பு விசை மையம் மற்றும் எடை ஆகியவை முன்னோக்கி இருப்பதால் சிறந்த பேலன்ஸ் கொண்டதாக இருக்கும்.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

3 சக்கரங்களிலும் ஏபிஎஸ் சிஸ்டத்துடன் இணைந்து செயல்புரியும் வகையில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 15 இஞ்ச் சக்கரங்கள் எலியோவுக்கு கூடுதல் பலத்தையும், தோற்றத்தையும் வழங்குகிறது.

2 சீட்டர்

2 சீட்டர்

இந்த காரில் 2 பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும். முன்னால் ஒருவரும், பின்புறம் ஒருவரும் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 மைலேஜ்

மைலேஜ்

இந்த கார் நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரும் என்கிறது எலியோ மோட்டார்ஸ். நகர்ப்புற டிரைவிங்கில் 20.63 கிமீ மைலேஜை தரும் என்கிறது எலியோ.

பயண தூரம்

பயண தூரம்

இதில் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 1,000 கிமீ வரை செல்லலாம் என்கிறது எலியோ மோட்டார்ஸ்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

3 ஏர்பேக்குகள், ரோல் கேஜ் ஃபிரேம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. முதற்கட்ட கம்ப்யூட்டர் சோதனைகளில் இந்த காருக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துள்ளது.

விற்பனை?

விற்பனை?

கிராஷ் டெஸ்ட் சோதனைகளில் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக எலியோ தெரிவித்துள்ளது.

விலை

விலை

இந்த காருக்கு 6,800 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.4 லட்சமாகும்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

2014ல் லாஸ் ஏஞ்சல்ஸ், ஸ்ட்ரீவ்போர்ட்டில் அமைந்துள்ள ஆலையில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X