ஓட்டி பார்க்கத் தூண்டும் உலகின் பெஸ்ட் சூப்பர் கார்கள்

வித்தியாசமான டிசைன், சீறிப்பறக்கும் திறன் என சூப்பர் கார்கள் மீது அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு. ஆனால், அந்த கார்களை டார்லிங் என செல்லமாக அழைத்தாலும், அந்த சூப்பர் கார்களை ஓட்டிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் வாய்க்குமா என்பது அனைவருக்குள்ளும் எரிந்து கொண்டிருக்கும் தாகத் தீ.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த சூப்பர் கார்களை ஓட்டிப் பார்த்துவிட வேண்டும்; அதற்காக நான் எதையும் தியாகம் செய்யத் தயார் என ரசிகர்கள் கூறிய கார்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், அனைத்துமே ஒவ்வொரு விதத்தில் பெஸ்ட்தான். எப்படி என்கிறீர்களா? ஸ்லைடருக்கு வந்து பாருங்கள்.

சிறப்பு தொகுப்பு

சிறப்பு தொகுப்பு

இணைய உலகில் ஆங்கிலத்தில் கூட கிடைக்காத ஆட்டோமொபைல் பற்றிய சிறப்பு தகவல் தொகுப்புகளை உங்கள் டிரைவ்ஸ்பார்க் தளம் தமிழில் வழங்கி வருகிறது. அந்த வகையில், இன்று பட்டைய கிளப்பும் சூப்பர் கார்களை பற்றிய முக்கிய தகவல்களுடன் கூடிய சிறப்பு தொகுப்பை தொடர்ந்து படியுங்கள்.

அஸ்டன் மார்ட்டின் விரேஜ்

அஸ்டன் மார்ட்டின் விரேஜ்

அஸ்டன் மார்ட்டின் கார்களின் டிசைனுக்கு உலக அளவில் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. ஏன், ஜேம்ஸ்பாண்ட்கள் கூட இந்த காரின் ரசிகர்கள்தான். டிசைன் மட்டுமல்ல இந்த காரில் 490 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 295 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. இந்த காரை சொந்தமாக வாங்கி ஓட்டுவதற்கு ரூ.2.5 கோடியை கொடுக்க வேண்டும்.

ஆடி ஆர்8

ஆடி ஆர்8

மும்பையில் நேற்று முன்தினம் தீயில் எரிந்த அதே கார்தான். ஆனால், டியூனிங் பிரச்னையால் அந்த கார் தீப்பற்றியது தெரியவந்துள்ளது. சூப்பர்ப் டிசைன் கொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 560 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது. இந்தியாவில் ரூ.1.75 கோடியில் விற்பனை செய்யப்படுகிறது.

லெக்சஸ் எல்எஃப்ஏ நுர்பர்கிரிங்

லெக்சஸ் எல்எஃப்ஏ நுர்பர்கிரிங்

டொயோட்டாவின் சொகுசு பிராண்டில் தயாரிக்கப்படும் கார் இது. ஜெர்மனியில் நடத்தப்பட்ட சோதனையில் சாலையில் இயக்க அனுமதி பெற்ற 4வது அதிவேக கார் லெக்சஸ் எல்எஃப்ஏ. ஆடி ஆர்8 போன்றே 2 சீட்டர் ஸ்போர்ட்ஸ் காரான இதில் 552 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 298 கிமீ வேகம் வரை பறக்கும்.

மஸராட்டி கிரான்டூரிஷ்மோ ஸ்போர்ட்

மஸராட்டி கிரான்டூரிஷ்மோ ஸ்போர்ட்

மஸராட்டி கார்களுக்கு உலக அளவில் பெரும் ரசிக பட்டாளம் இருக்கிறது. கையாளுமை, பெர்ஃபார்மென்ஸ் என அனைத்திலும் நன்மதிப்பை பெற்ற கார். 442 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.7 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 301 கிமீ வேகம் வரை செல்லும். 0-100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் தொட்டுவிடும். ரூ.1.4 கோடியில் விற்பனை செய்யப்படுகிறது.

 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ரோட்ஸ்டெர்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ரோட்ஸ்டெர்

பென்ஸ் டிசைனுக்கு அங்கீகாரம் கொடுத்த கார் மாடல். இந்த கன்வெர்ட்டிபில் காரில் 563 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 340 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது.

பென்ட்லீ கான்டினென்ட்டல் ஜிடி ஸ்பீடு

பென்ட்லீ கான்டினென்ட்டல் ஜிடி ஸ்பீடு

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 616 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் டபிள்யூ12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 330 கிமீ வேகம் வரை பறக்கும்.

புகாட்டி வேரோன் சூப்பர் ஸ்போர்ட்

புகாட்டி வேரோன் சூப்பர் ஸ்போர்ட்

உற்பத்தி நிலையிலிருக்கும் உலகின் அதிவேக கார் புகாட்டி வேரோன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த காரில் 987 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 8 லிட்டர் டபிள்யூ 16 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 431 கிமீ வேகம் வரை பறக்கும். இந்தியாவில் தோராயமாக இதன் அடக்கவிலை ரூ.16 கோடியாக இருக்கிறது.

செவர்லே கார்வெட் இசட்ஆர்1

செவர்லே கார்வெட் இசட்ஆர்1

அமெரிக்க தயாரிப்பான இந்த காரின் புதிய தலைமுறை மாடல் சமீபத்தில் டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் அறிமுகமானது. இந்த காரில் 638 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 330 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

ஃபெராரி 458 இட்டாலியா ஸ்பைடர்

ஃபெராரி 458 இட்டாலியா ஸ்பைடர்

ஸ்போர்ட்ஸ் கார் விரும்பிகளின் முதல் தேர்வில் இருக்கும் கார் இது. 562 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் மணிக்கு 319 கிமீ வேகம் வரை பறக்கும்.

 லம்போர்கினி அவென்டேடார் எல்பி700

லம்போர்கினி அவென்டேடார் எல்பி700

லம்போர்கினியின் வெற்றிகரமான சூப்பர் கார் மாடல். வித்தியாசமான டிசைன், சீறிப்பாயும் திறன் என இந்த காரின் வீரதீர பராக்கிரமங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 700 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் மணிக்கு 354 கிமீ வேகம் வரை செல்லும்.

 லம்போர்கினி கல்லார்டோ எல்பி 570-4 சூப்பர் லெக்கரா

லம்போர்கினி கல்லார்டோ எல்பி 570-4 சூப்பர் லெக்கரா

கல்லார்டோ சூப்பர் காரின் பல ஸ்பெஷல் எடிசன்களை லம்போர்கினி அறிமுகப்படுத்தியது. அதில் ஒன்றுதான் சூப்பர்லெக்கரா. மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும்.

 மெக்லேரன் எம்பி4 -12சி

மெக்லேரன் எம்பி4 -12சி

உலகின் அதி பிரபலமான இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 616 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.8 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 330 கிமீ வேகத்தில் பறக்கும்.

போர்ஷே பாக்ஸ்டன் எஸ் பிளாக் எடிசன்

போர்ஷே பாக்ஸ்டன் எஸ் பிளாக் எடிசன்

ஸ்டான்டர்டு வேரியண்ட்டை விட அதிக பவர்ஃபுல் மாடல் இது. 0-100 கிமீ வேகத்தை 5 வினாடிகளில் தொட்டுவிடும் திறன் கொண்ட இந்த கார் மணிக்கு 276 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

எஸ்ஆர்டி வைப்பர்

எஸ்ஆர்டி வைப்பர்

அமெரிக்க பிராண்டில் வெளிவரும் இந்த சூப்பர் காரில் 640 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 8.4 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 325 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

நிசான் ஜிடிஆர்

நிசான் ஜிடிஆர்

சச்சின் டெண்டுல்கர், உசேன் போல்ட் போன்ற விளையாட்டு பிரபலங்களின் ஆவலைத் தூண்டிய இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 530 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 3.8 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0-97 கிமீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் தொட்டுவிடும் இந்த கார் மணிக்கு 313 கிமீ வேகம் வரை செல்லும்.

உங்களுக்கு பிடித்த சூப்பர் கார் எது?

உங்களுக்கு பிடித்த சூப்பர் கார் எது?

நம் நாட்டில் சூப்பர் கார்களின் திறனை ஓட்டிப் பார்த்து பரவசமடையும் அளவுக்கு சாலைகள் இல்லாவிட்டாலும், ரேஸ் டிராக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருவதால் உங்களது கனவும் ஒருநாள் நிச்சயம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. எனது மனம் விரும்பிய சூப்பர் கார் இதுதான். அதை ஓட்டுவதற்காக நான் எதையும் செய்வேன் என்று ஆவலைத்தூண்டும் உங்களுக்கு பிடித்தமான சூப்பர் கார் எது? இந்த பட்டியலில் இடம்பெறாத காராக இருந்தால் கருத்துப் பெட்டியில் பதிவு செய்க.

Most Read Articles
English summary
Enjoy our list of exotic super cars in the photo feature below. Please note there is no best car or No.1 car in this list. Each of them have their own special characteristic. You can also suggest additions in this list by writing the car's name in the comments section after the article.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X