ஸ்பெயினில் போலி ஃபெராரி கார்கள் விற்பனை: 8 பேர் கைது

ஸ்பெயின் நாட்டில் ஃபெராரி உள்பட பிரபல பிராண்டுகளின் கார்களை போலியாக தயாரித்து விற்பனை செய்த 8 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபல கார்கள் போன்றே மாதிரி கார்களை வடிவமைப்பது உலக அளவில் சாதாரண விஷயமாக இருக்கிறது. ஆனால், சிலர் காப்புரிமை விதிமுறைகளை மீறி தயாரித்து விற்பனை செய்யும்போது அதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்வது வாடிக்கை.

Fake Ferrari Car

இதுபோன்று சம்பவம் ஸ்பெயினில் நடந்துள்ளது. அந்நாட்டை சேர்ந்த ஒரு கேரேஜ் ஒன்றில் பிரபல நிறுவனங்களின் கார்களை அச்சு அசலாக அப்படியே தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த கேரேஜில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஃபெராரி, லம்போர்கினி உள்பட பிரபல நிறுவனங்களின் பெயர்களில் போலியாக கார்களை விற்பனை செய்தது தெரிந்தது.

இதையடுத்து, அந்த கேரேஜை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில், ஒரு காரை ரூ.30 லட்சம் என்ற விலையில் அவர்கள் விற்பனை செய்ததும் அம்பலமானது.

Most Read Articles
English summary
They say imitation is the best form of flattery, but the person, or in this case, the automaker, we are sure, is anything but flattered. The spanish police, earlier this week, busted a fake car racket in which eight people were arrested and charged.
Story first published: Saturday, August 3, 2013, 13:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X