மணிக்கு 250 கிமீ வேகத்தில் பறக்கும் புதிய எலக்ட்ரிக் சூப்பர் பஸ்

15 மீட்டர் நீளம் கொண்ட உலகின் நீளமான சூப்பர் பஸ்சுக்கு சாலையில் இயக்குவதற்கான அனுமதி கிட்டியுள்ளதால் விரைவில் துபாய் மற்றும் அபுதாபிஇடையே புயல் வேக பயணத்தை துவங்க இருக்கிறது. முன்னாள் விண்வெளி வீரரும், பார்முலா-1 காற்றியக்கவியல்(ஏரோடைனமிக்) வடிவமைப்பு நிபுணருமான அண்டோனியா டெர்சி இந்த பஸ்சை வடிவமைத்துள்ளார்.

இந்த சூப்பர் பஸ் வடிவமைப்பு திட்டக் குழுவுக்கு ஹாலந்து நாட்டின் டெல்ஃப்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஊபு ஆக்கெல்ஸ் தலைமை வகித்தார். அபுதாபியிலுள்ள மஸ்தார் நகரத்தில் வைத்து இந்த பஸ்சை அண்டோனியா டெர்ஸி வெற்றிகரமாக சோதனைகள் நடத்தியுள்ளார். ஹாலந்து நாட்டு போக்குவரத்து துறை இந்த சூப்பர் பஸ்சை சாலையில் இயக்குவதற்கான அனுமதியை சமீபத்தில் வழங்கியிருக்கிறது. இதைத்தொடர்ந்து, ஐக்கிய அரபு நாடுகளை இணைக்கும் விதமாக விரைவில் தனது சூப்பர் பயணத்தை துவங்க இருக்கிறது இந்த பஸ். பஸ்சின் திட்ட மதிப்பீடு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எலட்க்ரிக் பஸ்

எலட்க்ரிக் பஸ்

இந்த பஸ்சின் முக்கிய அம்சமே இந்த பஸ் முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் சூப்பர் ஃபாஸ்ட் பஸ். மேலும், சூரிய ஒளி மின்சாரம் மூலம் சார்ஜ் ஆகிக்கொள்ளும் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் மாற்று எரிபொருள் தொழில்நுட்ப வரலாற்றிற்கு இந்த பஸ் சுழி போட்டு துவங்கியுள்ளது.

டிசைன்

டிசைன்

49 அடி நீளமும், 8 அடி அகலமும் கொணஅட இந்த பஸ் ஐந்தரை அடி உயரம் கொண்டது. பயணிகள் விரைவாகவும், எளிதாகவும் ஏறி இறங்க வசதியாக ஒரு பக்கத்திற்கு 8 கதவுகள் வீதம் 16 கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

அம்சங்கள்

அம்சங்கள்

மிக ஆடம்பரமாகவும், சொகுசாகவும் இருக்கும் இருக்கைகள், இன்டிரியர்களால் குட்டி விமானத்தை போன்று இருக்கிறது இதன் உட்புறம். குளுகுளு வசதி கொண்ட இந்த பஸ் பயணிகளுக்கு குளிர்ச்சியையும், வேகத்தில் மனதில் சூட்டையும் கொடுக்கும் வித்தியாசமான அனுபவத்தை தரும்.

டாப் ஸ்பீட்

டாப் ஸ்பீட்

சூப்பர் பஸ் என்றழைப்பதற்கு காரணம், இந்த பஸ் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும். இந்த வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்ட எலக்ட்ரிக் பஸ் என்பதும் இதன் கூடுதல் சிறப்பம்சம்.

திட்ட மதிப்பீடு

திட்ட மதிப்பீடு

7 மில்லியன் பவுண்ட்டுகள் மதிப்பீட்டில் இந்த சூப்பர் பஸ்சை உருவாக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், சாலையில் இயக்குவதற்கான நிலையை எட்டுவதற்கு திட்டமிட்டதை விட கூடுதல் செலவு பிடித்ததாக இத்திட்டத்தில் செயலாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

49 அடிநீளம் கொண்ட இந்த பஸ்சில் 23 பயணிகள் அமர்ந்து செல்லலலாம்.

எக்ஸ்பிரஸ் சாலை

எக்ஸ்பிரஸ் சாலை

அதிக நீளமும், வேகமும் கொண்ட பஸ் என்பதால் துபாய்-அபுதாபி இடையிலான நெடுஞ்சாலை அருகிலேயே புதிய விரைவு சாலை இந்த பஸ் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிவேக சூப்பர் பஸ்

உலகின் அதிவேக சூப்பர் பஸ்

பயண நேரம்

பயண நேரம்

துபாய்-அபுதாபி இடையிலான 120 கிமீ தூரத்தை இந்த எலக்ட்ரிக் சூப்பர் பஸ் அரை மணி நேரத்தில் கடந்துவிடும்.

Most Read Articles
English summary
Inventors from Netherlands have developed an electric super bus that can reach a top speed of an incredible 250kmph. The Superbus is luxurious and has space for 23 passengers.
Story first published: Wednesday, January 23, 2013, 9:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X