Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஃபெராரி புதிய ஹைப்பர் கார்... ஊரெல்லாம் இதே பேச்சு!!

Posted by:
Updated: Tuesday, February 19, 2013, 13:17 [IST]

அடுத்த மாதம் துவங்க இருக்கும் ஜெனீவா மோட்டார் ஷோவில் தனது புத்தம் புதிய ஹைப்பர் காரை ஃபெராரி அறிமுகம் செய்ய இருக்கிறது. ஃபெராரியின் என்ஸோ ஹைப்பர் காரின் அடுத்த தலைமுறை காராக இது வர இருக்கிறது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இந்த புதிய கார் தற்போது எஃப்150 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது. ஆனால், அறிமுகத்தின்போது இந்த பெயர் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பெயருக்கு சொந்தம் கொண்டாடி ஃபோர்டு போட்ட வழக்கு காரணமாக இந்த பெயர் மாற்றம் இருக்கலாம். மேலும், இந்த காரின் விலை மில்லியன் யூரோவில்தான் ஆரம்பிக்கும் என ஆட்டோமொபைல் துறை ஆருடங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஃபெராரி இந்த கார் குறித்து இன்னமும் செய்திகளை கசிய விடாமல் கமுக்கமாக இருந்து வருகிறது.

இதனிடையே, இந்த காரை வாங்குவதற்கான தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு கூட்டம் ஒன்றை ஃபெராரி சமீபத்தில் நடத்தியது. இதில், இந்தியாவை சேர்ந்த 2 பேர் கலந்து கொண்டார்களாம்.ஃபெராரி எஃப் 150 காரின் அதிகாரப்பூர்வ படங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், ஜோஸியா லகோலா என்ற டிசைனர் வரைந்த எஃப் 150 காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆசிய வாடிக்கையாளரின் ஆர்வம்

முன்பு மொத்தமாக 399 என்ஸோ ஹைப்பர் கார்களை மட்டுமே ஃபெராரி தயாரித்து விற்பனை செய்தது. இந்த நிலையில், தற்போது எஃப் 150 காருக்கு அதிக வரவேற்பு இருப்பதை பார்த்து கூடுதலாக 100 கார்களை அதாவது, 499 எஃப் 150 கார்களை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது ஃபெராரி. குறிப்பாக, சீனா உள்ளிட்ட ஆசிய மார்க்கெட்டுகளை குறி வைத்து அதிக எண்ணிக்கையில் இந்த முறை உற்பத்தி செய்ய உள்ளது.

எஞ்சின்

இந்த காரில் 6.2 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 900 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மேலும், இந்த காரில் ஆற்றல் மீட்பு தொழில்நுட்பமும் இருக்கிறது. இந்த காரில் டியூவல் கிளட்ச் பொருத்தப்பட்டிருக்கும்.

காக்பிட்

பார்முலா1 கார்களை போன்று இதன் காக்பிட்டை தாழ்வாக அமைத்திருப்பதாக ஆட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரேஸ் டிராக்கில் பறக்கும் எஃப் 150

இத்தாலியின் மரனெல்லோவிலுள்ள ஃபெராரிக்கு சொந்தமான ஃபியரானோ ரேஸ் டிராக்கில் இந்த கார் சோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை காணலாம்.

எஃப் 150 கட்டுமானம்

ஃபெராரி எஃப் 150 காரின் கட்டுமானம் குறித்த விளக்க வீடியோ.

Story first published:  Tuesday, February 19, 2013, 13:08 [IST]
English summary
Ferrari's successor to the Enzo hypercar, the car codenamed F150 may not have appeared in front of the general public yet. However, the Italians have already introduced the F150 to potential customers.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil