இந்தியாவிலிருந்து 'ஜீப்' கார்களை ஏற்றுமதி செய்ய ஃபியட் முடிவு?

By Saravana
Jeep Grand Cherokee
இந்தியாவை முக்கிய உற்பத்தி கேந்திரமாக பயன்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகளை ஃபியட் மேற்கொண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் கூட்டணியிலிருந்து தாமதமாக வெளியே வந்தாலும் இந்தியாவில் வலுவான வர்த்தகத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை ஃபியட் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

டீலர் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்து வரும் அந்த நிறுவனம் விரைவில் தனது பிராண்டில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஜீப் , அபார்த் உள்ளிட்ட பிராண்டுகளின் பிரிமியம் கார்களையும் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

ஜீப் பிராண்டு கார்கள் தனியாக அமைக்கப்படும் ஷோரூம்களில் விற்பனை செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த கட்டமாக ஆசிய பசிபிக் நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஜீப், டோட்ஜ், அபார்த் உள்ளிட்ட பிராண்டுகளின் கார்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்காக, தற்போது சப்ளையர்களுடனும், முக்கிய உதிரிபாக தயாரிப்பாளர்களுடனும் ஃபியட் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் ஜீப், டோட்ஜ் கார்கள் உற்பத்தி செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக ஃபியட் நிறுவனத்தின் அதிகாரி என்ட்ரிகோ அட்டனாசியா தெரிவித்துள்ளார்.

Most Read Articles
மேலும்... #fiat #four wheeler #ஃபியட்
English summary
Fiat is studying the feasibility of turning India into a manufacturing hub for Chrysler products that will cater to the Asia Pacific region, reports Livemint. Enrico Atanasio, the outgoing FIAT Group Automobiles India Pvt. Ltd later confirmed the Group's plans.
Story first published: Thursday, May 16, 2013, 10:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X