இந்த ஆண்டு புன்ட்டோ அபார்த் காரை அறிமுகப்படுத்தும் ஃபியட்

பார்த்தவுடனேயே , 'இது ரொம்ப ஹாட் மச்சி," என்று சொல்ல வைக்கும் தோற்றத்துடன், பவரை வாரி இறைக்கும் திறன் கொண்ட புன்ட்டோ அபார்த் காரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது ஃபியட். ஆட்டோமொபைல் பிரியர்களின் எதிர்பார்ப்பை கனக்கச்சிதமாக பூர்த்தி செய்யும் அம்சங்களை கொண்டிருக்கிறது புன்ட்டோ அபார்த்.

இத்தாலியில் 2 கதவுகள் மாடலாக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த காரை இந்தியாவில் 4 கதவுகள் மாடலாக வர இருக்கிறது. ஃபியட் ஷோரூம்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆளுமை புன்ட்டோ அபார்த்துக்கு இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு த்ரில்லான அனுபவத்தை தரப்போகும் புன்ட்டோ அபார்த் காரின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்

தோற்றம்

புன்ட்டோ அபார்த் தோற்றம் குட்டி ஸ்போர்ட்ஸ் காராக இருக்கிறது. இதன் அலாய் வீல் ஒரு ராட்சத உணர்வை ஏற்படுத்துகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார்கள் அதிகபட்சம் 89 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் நிலையில், இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.4 லிட்டர் டி-ஜெட் எஞ்சின் 160 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

 சஸ்பென்ஷன் & டிஸ்க் பிரேக்

சஸ்பென்ஷன் & டிஸ்க் பிரேக்

அதிக பவர் கொண்ட கார் என்பதால் இதில் உறுதிமிக்க சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும்.

அறிமுகம்

அறிமுகம்

இந்தியாவில் பண்டிகை காலத்தில் இந்த காரை அறிமுகம் செய்வதற்கு ஃபியட் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ஒருங்கிணைப்பு

இந்தியாவில் ஒருங்கிணைப்பு

இந்த கார் அசெம்பிளிங் செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.9 லட்சம் ஆரம்ப விலையில் இந்த ஹாட் ஹேட்ச்பேக் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புன்ட்டோ அபார்த்

Most Read Articles
English summary
Italian auto maker is believed to be working towards launching a special version of Grande Punto premium hatchback under the moniker of Abarth in India. The company has also revealed plans of establishing a localised assembly for Abarth Punto, which will raise many eyebrows among auto aficionados.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X