உற்பத்தி நிலையை எட்டாமல் தோல்வியடைந்த கான்செப்ட் கார்கள்!

உலகின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த கார் தயாரிப்பாளர்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், புதிய மாடல்களை முதலில் கான்செப்ட் மாடலாக தயாரித்து பார்வைக்கு விடுகின்றனர். அந்த கான்செப்ட் காருக்கு பொதுமக்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை வல்லுனர்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பு மற்றும் கருத்துக்களை பொறுத்து அதனை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.

எனவே, கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்படும் பல மாடல்கள் உற்பத்தி நிலையை எட்டுவதில்லை. அந்த வகையில், அமெரிக்க கார் தயாரிப்பாளர்களான ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறிஸ்லர் நிறுவனங்கள் பிரபல ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் பார்வைக்கு வைத்திருந்து உற்பத்தி நிலையை எட்ட முடியாத சில கான்செப்ட் கார் மாடல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

தோல்வியடைந்த கான்செப்ட் கார்கள்!

தோல்வியடைந்த கான்செப்ட் கார்கள்!

டாடா மோட்டார்ஸ் இண்டிகோ பெயரில் செடான் காரை விற்பனை செய்து வருகிறது. ஆனால், இதற்கு முன்பாகவே ஃபோர்டு நிறுவனம் ஜிடி 1996ல் இண்டிகோ என்ற பெயரில் கான்செப்ட் கார் மாடலை பார்வைக்கு அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் பிரபலமான இண்டி ரேஸ் கார் மாடல்களை தழுவி டிசைன் செய்யப்பட்ட இந்த கார் உற்பத்தி நிலையை எட்டாமல் தோல்வி கண்டது.

ஃபோர்டு இண்டிகோ

ஃபோர்டு இண்டிகோ

இந்த காரில் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. 3.9 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டதாக இருந்தது.

புயிக் பிளாக்ஹாக்

புயிக் பிளாக்ஹாக்

புயிக் கார்கள் என்றாலே பழைய டிசைன் என்ற மனநிலையை மாற்றும் விதத்தில் புயிக் பிராண்டால் அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடல்தான் புயிக் பிளாக்ஹாக். இளைய தலைமுறையினரை கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டது.

புயிக் பிளாக்ஹாக்

புயிக் பிளாக்ஹாக்

கிளாஸி டிசைன் கொண்ட இந்த காரில் முதன்முறையாக புயிக் நிறுவனத்தின் புதிய 463 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஜிஎஸ் வி8 எஞ்சின் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. 1970ம் ஆண்டில் இது அறிமுகமான இந்த கார் உற்பத்தி நிலையை எட்டவில்லை.

ஜீப் ஹூரிக்கேன்

ஜீப் ஹூரிக்கேன்

ஆஃப் ரோடு யுட்டிலிட்டி வாகனங்களை தயாரிப்பதில் புகழ்பெற்ற ஜீப் நிறுவனம் 20 இஞ்ச் சக்கரங்கள் மற்றும் 37 இஞ்ச் டயர்களுடன் அறிமுகம் செய்த ஆஃப் ரோடு கான்செப்ட் எஸ்யூவிதான் ஹூரிக்கேன்.

 ஜீப் ஹூரிக்கேன்

ஜீப் ஹூரிக்கேன்

இந்த எஸ்யூவியின் முக்கிய அம்சமாக கூறப்படுவது இதன் சக்கரங்கள் அனைத்தும் 360 டிகிரி கோணத்தில் திரும்பும் வசதி கொண்டது. எனவே, இது 0 டர்னிங் ரேடியஸ் கொண்டது. ஆஃப் ரோடு பிரியர்களை பெரிதும் கவர்ந்த இந்த டிசைனும் உற்பத்தி நிலையை எட்டவில்லை.

கிறிஸ்லர் அட்லான்டிக்

கிறிஸ்லர் அட்லான்டிக்

ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் தலைமையின் கீழ் கிறிஸ்லர் செயல்பட்டபோது டிசைன் செய்யப்பட்ட கான்செப்ட் கார் மாடல்தான் அட்லான்ட்டிக். 1995ல் இந்த கான்செப்ட் காரை டெய்ம்லர் அறிமுகம் செய்தது. 1930 களில் விற்பனை செய்யப்பட்ட புகாட்டி அட்லான்டிக் காரின் டிசைன் இந்த கான்செப்ட் கார் நினைவூட்டுவதாக இருந்தது.

 கிறிஸ்லர் அட்லான்டிக்

கிறிஸ்லர் அட்லான்டிக்

மார்க்கெட்டிங் யுக்திக்காக மட்டுமே இந்த கான்செப்ட் காரை கிறிஸ்லர் பயன்படுத்திக் கொண்டது.

லிங்கன் கான்டினென்டல் கான்செப்ட்

லிங்கன் கான்டினென்டல் கான்செப்ட்

ஃபோர்டு நிறுவனத்தின் பிரிமியம் கார் பிராண்டான லிங்கன் அறிமுகம் செய்த கான்செப்ட் மாடல்தான் கான்டினென்டல். 2002ல் இந்த கான்செப்ட் காரை லிங்கன் அறிமுகம் செய்தது.

லிங்கன் கான்டினென்டல் கான்செப்ட்

லிங்கன் கான்டினென்டல் கான்செப்ட்

ரோல்ஸ்ராய்ஸ் கார்களை நினைவூட்டும் டிசைன் கொண்ட லிங்கன் கான்டினென்டல் அமெரிக்காவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த காரை உற்பத்தி செய்வதற்கான பெரும் முதலீட்டுக்கு ஃபோர்டு தயாராக இல்லை.

Most Read Articles
English summary
Carmakers across the globe are continuously designing and developing new cars that are first revealed to the world as concept cars. The responses generated by the the general public and car critics are used by carmakers to asses if the concept can make it to the production line or not. Further, the concept must also make a fine business case even if it impresses the people.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X