ஈக்கோஸ்போர்ட் புக்கிங் 40,000ஐ தாண்டியது... வெற்றி ரகசியம் என்ன?

By Saravana

கார் மார்க்கெட்டில் வானிலை சரியில்லாத இந்த நேரத்தில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு முன்பதிவு செய்தோர் எண்ணிக்கைய 40,000ஐ கடந்துள்ளது. காத்திருப்பு காலம் ஓர் ஆண்டு வரை நெருங்குவதால், பல வேரியண்ட்டுகளின் முன்பதிவை ஃபோர்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வரவு டஸ்ட்டருக்கு நேரடி பாதிப்பை கொடுத்துள்ளது. இந்த நிலையில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முன்பதிவு றெக்கை கட்டி பறப்பதற்கான சில முக்கிய காரணங்களை ஸ்லைடரில் காணலாம்.

 விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

ஈக்கோஸ்போர்ட் ரூ.5.82 லட்சம் முதல் ரூ.9.37 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. ஆனால், டஸ்ட்டர் ரூ.8 லட்சம் முதல் ரூ.12.18 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. டஸ்ட்டரின் டாப் வேரியண்ட்டுகளுக்கும், ஈக்கோஸ்போர்ட்டின் டாப் வேரியண்ட்டுகளுக்கும் இடையில் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் வித்தியாசம் இருக்கிறது. ஈக்கோஸ்போர்ட் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு விலை மிக முக்கிய காரணம்.

ஸ்டைலு, ஸ்டைலுதான்

ஸ்டைலு, ஸ்டைலுதான்

டஸ்ட்டர் கம்பீரமான எஸ்யூவியாக இருக்கும் நிலையில், பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும், நகர்ப்புறத்துக்கு ஏற்ற மிக காம்பெக்ட்டான, அதேசமயம் மிக ஸ்டைலான எஸ்யூவியாக ஈக்கோஸ்போர்ட் இருக்கிறது. வாடிக்கையாளர்களை கவர ஈக்கோஸ்போர்ட்டின் ஸ்டைலும் முக்கிய காரணமாக கூறலாம்.

 மாடல்கள்

மாடல்கள்

ஈக்கோஸ்போர்ட்டில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்க வகையில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மட்டுமின்றி 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஆட்டோமேட்டிக் மாடலிலும் கிடைக்கிறது. ஈக்கோஸ்போர்ட்டின் ஆட்டோமேட்டிக் மாடலுக்கும் அதிக தேவை இருப்பது குறிப்பிடத்தக்கது.

வசதிகள்

வசதிகள்

டஸ்ட்டரின் டாப் வேரியண்ட்டிலேய பல்வேறு வசதிகள் இல்லாதது பெரும் குறையாக போயுள்ளது. மேலும், ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் இருந்தாலும், 3 லட்சம் குறைவான விலையில் கிடைக்கும் ஈக்கோஸ்போர்ட்டின் டாப் வேரியண்ட்டில் கிளைமேட் கன்ட்ரோல், லெதர் இருக்கைகள், அட்ஜெஸ்ட வசதியுடன் டிரைவர் இருக்கை, 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், வாய்ஸ் சிங்க் வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கிடைப்பதும் முக்கிய காரணமாக கூறலாம்.

 மைலேஜ் வித்தியாசம்

மைலேஜ் வித்தியாசம்

டஸ்ட்டரின் 1.6 லி பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.24 கிமீ மைலேஜ் தருவதாகவும், ஈக்கோஸ்போர்ட் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடல் 15.8 கிமீ மைலேஜ் தருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஈக்கோஸ்போர்ட்டின் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, டஸ்ட்டரின் 85 பிஎஸ் டீசல் மாடல் லிட்டருக்கு 20.46 கிமீ மைலேஜையும், 110 பிஎஸ் மாடல் 19.01 கிமீ மைலேஜை தருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஈக்கோஸ்போர்ட டீசல் மாடல் லிட்டருக்கு 22.7 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதத் தவணை

மாதத் தவணை

உதாரணமாக, ஏழு ஆண்டுகளுக்கான கடன் தவணைத் திட்டத்தின்படி டஸ்ட்டரின் பேஸ் பெட்ரோல் வேரியண்ட்டுக்கு ரூ.12,264ம், ஈக்கோஸ்போர்ட்டிற்கு ரூ.8,614ம் மாதத் தவணையாக இருக்கிறது. இதேபோன்று, பிற வேரியண்ட்டுகளிலும் டஸ்ட்டருக்கும், ஈக்கோஸ்போர்ட்டுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

 விலை உயர்வு பாதிக்காது

விலை உயர்வு பாதிக்காது

முன்பதிவு எண்ணிக்கை கணிசமாக இருக்கும் நிலையில், ஈக்கோஸ்போர்ட் விலை கடந்த வாரம் ரூ.38,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தாலும், கொடுக்கும் மதிப்புக்கு சிறந்த காம்பெக்ட் எஸ்யூவியாக ஈக்கோஸ்போர்ட் மாறியிருக்கிறது. உற்பத்தி சுமை குறைந்து மீண்டும் முன்பதிவு திறக்கப்பட்டால், அடுத்து ஓர் ரவுண்டு வருவதற்கான வாய்ப்பும் ஈக்கோஸ்போர்ட் வசம் இருக்கிறது.

Most Read Articles
Story first published: Tuesday, September 10, 2013, 12:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X